மத்திய அரசால் தாக்கப்பட்டுள்ள 2014-2015க்கான பட்ஜெட்
பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றிருந்தாலும் அதன் ஆக்கப்பூர்வ செயல்பாட்டினை
ஆய்வுக்கு உட்படுத்தும் போது நாட்டின் நிதிநிலை பின்தங்கி இருக்க கூடிய இந்த
சூழ்நிலையில் ஆடம்பர திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வறுத்தமளிப்பதாக பல்வேறு சமூக நல அமைப்புகள்
கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல
திட்டங்கள் தனியார்மயமாக்கல் கொள்கையை வலியுறுத்துவையாக உள்ளது. குறிப்பாக
மக்களின் எண்ணத்தையும், தேவையையும் பூர்த்தி செய்பவகையாக இல்லாமல் கட்சியின்
நிலைப்பாட்டினை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் பல
சுவாரஷ்யமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய தேவையை பூர்த்திசெய்ய
கூடிய திட்டங்கள் அதில் இல்லாமல் போனதும், முக்கியத்துவம் தரப்படாததும் வேடிக்கை.
அதில் குறிப்பிட வேண்டிய திட்டங்கள் பிண்வருமாறு
நாடு முழுவதும் 100 நவீன நகரங்கள் உருவாக்கப்படும் அதற்கு
ரூ.7060 கோடி அரசு ஒதுக்கியிருப்பது, நாட்டின் ஒருமைபாட்டை மக்களிடம் கொண்டு
சேர்ப்பதற்காக வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு 200 கோடி செலவு செய்ய
திட்டமிருப்பது, கங்கையை பாதுகாக்கும் திட்டத்திற்கு ரூ.2037 கோடி ஒதுக்கியிருப்பது
அதேசமயம் மக்களால் மிகவும் எதிர்பார்த்திருக்கும் திட்டங்களில் ஒன்றான நதி நீர்
இணைப்பு திட்டத்திற்கு முதற்கட்ட ஆய்வு பணிக்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருப்பது
போன்றவை மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக இல்லை என பொதுமக்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.
அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூக
வளமேம்பாடு, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய தேவைகள் கேள்வி குறியாகி உள்ள போது அதனை
சரிவிகித முறையில் எப்படி கையாள்வது போன்ற அடிப்படை சிந்தனைகளை தவிர்த்து
திட்டங்களை அறிவித்திருப்பது மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக
ஆய்வாளர்கள் கருத்து தெர்வித்துள்ளனர்.
கட்சியிகளின் நிலைப்பாட்டில் பொதுவாக மாற்று கருத்திருப்பது
வாடிக்கையாக இருந்தாலும், தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையில் அலட்சியம் காட்டி
வெளியிட்ட நிதிநிலை அறிக்கையை இன்னும் சீர்தூக்கி தயாரித்திருந்தால் நாட்டின்
பணவீக்கமும் சரிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். மக்களின் மேம்பாடு
ஒரு வேலை உணவு தேவையை பூர்த்தி செய்பவனவாக இல்லாமல் நிரத்தர தீர்வு காணப்பட கூடியதாக
இருக்க வேண்டும், அதற்கான அம்சங்களை மத்திய மாநில அரசுகள் தங்களின் நிதிநிலை
அறிக்கையில் அரசியல் காரணங்களுக்காக தவிர்த்திருப்பது இந்தியா வளர்ச்சி பாதையில்
செல்லும் வேகத்தை குறைக்குமே தவிர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, வறுமையை முழுமையாக இந்தியாவில் ஒழிக்க வளர்ச்சி பெற
வாய்ப்பே இல்லை.
காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மது ஒழிப்பு
அமல்படுத்தப்பட்டிருக்கிறது, அதாவது அரசு மதுவை விற்பதற்கு ஒரு சில கடுமையான
நிபந்தனைகளை விதித்துள்ளது அதன் நிமிர்த்தம் அரசு சார தனியார் மது கூடங்கள் உரிய
உரிமம் பெற்று அதனை விற்பனை செய்து வருகின்றனர் என பெருமை கொள்ளும் பாரதிய ஜனதா
ஆட்சியாளர்கள் ஏன் இந்த நடைமுறையை மற்ற மாநிலங்களில் அமல்படுத்த வேண்டிய தேவை
குறித்து அக்கறை காட்டுவதில்லை. போதை பொருட்களின் வரியை
உயர்த்தியுள்ள அரசு அதனை மேலும் ஒரு படி சென்று கடுமையாக்கியிருக்கலாம், ஆனால் அதில்
சிறிய மெத்தனம் காண்பித்திருப்பது மோடி தனது பிரச்சார கூட்டங்களில் செய்த
நம்பிக்கையை வேடிக்கையாக்கி இருக்கிறது.
தினசரி வேலையாகவே நம்பிக்கையின் உணர்வுகளை ஆட்சியாளர்கள்
புரிந்து கொள்வது ஏற்றத்திற்கான வாழ்வை ஒருபோதும் தராது என்பதற்கு பாஜகவின்
மத்திய பட்ஜெட் முன்மாதிரியாக
அமைந்துள்ளது, அதே சமயத்தில், உயர்கல்வி நிறுவனங்களை நிறுவ அக்கறைகாட்டும் அரசு
தற்போது உள்ள நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து நிதி ஒதுக்கீடு செய்யாதது
வறுத்தம் அளிப்பதாக பல்வேறு ஆய்வாளர்கள், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துகளை
வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment