காலை எழுந்தது முதல் தொலைப்பேசியில்
பதிவிறக்கி வைத்திருக்கும் செய்தி தொடர்பான அனைத்து இயங்கிகளும் ஒவ்வொரு நிமிடமும்
நம்மை அரசியல், தொடர் நிகழ்வுகளை சார்ந்தே பயணிக்க
வைக்கிறது.
மக்களவையில் நடைபெற்று வரும்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை பொருத்த வரையில் தமிழக அமைச்சர்கள் எழுப்பும்
விவாதங்கள் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய விவாதமாக எடுத்துறைக்கப்படுகிறதா அல்லது கட்சியின் மேலிட சுமையின் வற்புறுத்தலால் நடத்தப்படும்
நாடகமா? என்ற அச்சம் நாடாளுமன்றம் தொடர்பான
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போதுதான் முழுமையாக புரிந்து கொள்ளமுடிந்தது. மக்களின்
எதிர்பார்ப்புகளை அரசு என்ற போர்வை கட்சி என்ற
குழுக்களால் திசை அறியாது செய்துவிடும் எச்ச வேலைகளில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. கனவு அதற்கான தேடலை
மாநில அரசுகள் சுய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதும் எண்ணங்களை விட குறைந்த அளவு அக்கறையை மக்கள் சார்ந்த பொது
செயல்பாட்டிற்கு காண்பிப்பதும் எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. டெல்லி அரசியல்
வட்டாரங்கள் என்றைக்கும் சிந்தாந்தங்களின் அடிப்படையில் செயல்படுவதில்லை மாறாக
கட்சிக்கான பொருளாதார தேவையையும் கட்சியில் தனக்கான அந்தஸ்த்தையும் பரஸ்பர உரவினை கூட்டு சேர்ந்து உருவாக்கி
கொள்ளவே முயற்சி செய்வது எதார்த்தம்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேச
வேண்டிய தேவை இருந்தும் மாநில பிரச்சனைகளை கூற தயங்கும் அரசியல் தலைவர்கள், அப்படிப் பேச துணிந்தாலும் கூட தொடர்ந்து பேசப்பட்ட பிரச்சனையை
முன் வைக்கும் அமைச்சர்களாகவே அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றனர். சில மாநில
முதல்வர்கள் அவர் சார்ந்த அமைச்சர்களின் வாயிற்கு பூட்டு போட்டிருப்பார்களா என
தெரியவில்லை ! உள்ளே பேச வேண்டிய தேவை இருந்தும் விவாத நேரம் முடிந்த பின்பு ஊடக, பத்திரிக்கை நண்பர்களுக்கு அவர்களே அழைத்து தங்கள் கட்சியின்
நிலைப்பாட்டினை சொல்லி செல்வர், அதுவும் கூட ஒரு
முறை சொன்னதைத்தான் ஒவ்வொரு முறை சொல்லி செல்வதும் வேடிக்கை.
டெல்லியில் ஆட்சி அமைக்க பல்வேறு
முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கட்சியில் தேசிய
தலைவராக அமித் ஷா நியமனம் அக்கட்சியின் டெல்லி மாநில பஜாக தலைவர் சதிஷ் உபத்யாய
நியமனம் போன்றவை அதற்கான உதாரணங்களாகும், இதனை கருத்தில்
கொண்டு அத்வானி முதல் ராஜ்நாத்சிங் போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட அதற்கான
பிரச்சரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கட்சி
சார்ந்த முக்கிய நிகழ்வுகள், பத்திரிக்கையாளர்
சந்திப்பு போன்றவற்றில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களின் நலனுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அறிவித்துவருகிறது. காங்கிரஸ்
கட்சியில் முக்கிய தலைவர்களாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்ட திக் விஜய் சிங், ச்சி தரூர், பி.சி.சாக்கோ சல்மான்
குர்ஷித், மணிஷ் திவாரி போன்றவர்களின் சப்தம்
இப்போதெல்லாம் பட்ஜெட் தொடர் கூட்டங்களில் கூட தொலைக்காட்சிகளிலோ அல்லது பிரதான
பத்திரிக்கைகளிலோ கேட்காமல் போய்விட்டது. சமூக
வலைத்தலங்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரமும், தைரியமும் பிரதான
தொலைக்காட்சிகளுக்கும்,பத்திரிக்கைகளுக்கும்
இல்லாதது நாட்டின் நடுநிலை எப்படி கையாளப்படுகிறது என்பதை கேள்வி எழுப்பும் விதமாக
அமைந்துள்ளது,
பாரதிய ஜனதா
ஒருபக்கம் கட்சியின் காவி கொள்கையை நவீனப்படுத்த துவங்கியுள்ளது மறுமுனையில்
காங்கிரஸ் செயலற்று அமைதிகாக்கிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மட்டும்
அவ்வப்போது கூச்சலிட்டு வேடிக்கை காண்பிக்கிறார், ஆனால் மக்கள் இன்னும் தன்னை
சுற்றி நடக்கும் சூழ்ச்சியினை அடையாளம் கண்டு சீர்திருத்த முயற்சி செய்யாத முட்டாள்களாகவே
மடிவதும், என்னை போன்றவர்கள் தெரிந்ததை கிருக்குவதும் காலத்தின் நடைமுறை.
No comments:
Post a Comment