சென்னைக் பல்கலைக்கழக ஆடவர் விடுதயில்; வசிக்கிறார் புவியியல் துறையைச் சார்ந்த மாணவர் விக்னேஷ்வரன். இவர், தான் கற்ற தற்காப்புக் கலைகளுள் ஒன்றான முவாத்தாய் (MUAY THAI) என்று சொல்லப்படும் சீன மற்றும் பர்மீயர்களின் பூர்வீகக் கலைகளின் மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, வலுவில்லாத உடல் உறுப்புக்களை வலுவுள்ளதாக்கி, அதனையே ஆயுதமாகக் கொண்டு தற்காத்துக் கொள்ளும் கலையைப் பயிற்றுவிக்கின்றார்
திருவள்ளுவர் ஆடவர் விடுதியில் பல்கலைக்கழக மாணவர் பலரும் இந்தக் கலையை கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை மாலை நேரங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் சக மாணவர்களுக்கு தான் கற்ற கலையை பயிற்றுவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிறார் விக்னேஷ்வரன்.
இவர் பட்டுக்கோட்டையில் பிறந்தவர். சுமார் பத்து வருடம் இந்தக் கலையில் வாசங் லீ (Washung
Lee) என்ற சீன கலைஞரிடம் பயிற்சி பெற்று, இந்தியாவில் இந்தக் கலையைப் பற்றியதான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த எட்டு நண்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முழுமையாக இந்தக் கலையின் அறிவை, பயிற்சியாக அளித்து வருகின்றார்.
ஸ்டீபன். வி
he is relay doing a great job.great man.
ReplyDeleteThats my pleasure
Deleteare you guys talking about me or vignesh
Delete