இந்தியா என்ற ஒர் கூட்டில் பலப்பறவைகள் பறந்து
திரிந்தாலும் மற்றவர் ஒரு கணம் மெச்சுவதற்க்கு ஏற்ப பல பாரம்பரிய பண்ப்பாட்டு சிறப்புகள்
அழகு சேர்த்தாலும் இந்தியா இன்றும் மூடநம்பிக்கை
முரண்பாடுகளால் மதம், சாதி, இனம் என்ற கால்
கட்டுகலுக்கிடையில் வளர்ச்சி பெற்றிருக்கிறதே
தவிர ,தேசிய ஒருமைப்பாட்டில் இன்னும்
சுதந்திர இந்தியாசுதந்திர மற்றுதான் இருக்கிறது
என்பதே சமிப்பத்தில் நிகழ்ந்த ஒரு சிறு உதாரணமே சான்றாகும். அழகிய மாநிலமாக
கலாச்சார பண்பாட்டின் சிறப்புக்கு பேர்போன மாநிலம் ராஜஸ்தான் அம்மாநிலத்தின் ராஜச்மாந்த்
நகரில் அங்கத் சிங்க் என்கிற ஒரு ஆதிக்க சாதிக்காரன் வாழ்ந்துவந்தான் அவனுக்கு மினு
என்கிற 19 வயதில் ஒரு பெண் இருந்தால். மினு நீண்டக் காலமாக ஒரு தலித் தோழனை காதலித்து
வந்தால் இது ஊருக்கும் தெரியவந்தது. தன் மகள் ஒரு தலித்தை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும்
அவளை அடித்து துன்புறுத்தி மனதை மாற்ற முயற்சித்திருக்கிறான்.இந்த துன்புறுத்தலுக்கு
அஞ்சாத மினு தான் காதலிக்கும் அந்த தலித் தோழனை பதிவு திருமணம் செய்துகொண்டால், இது
அந்த சாதி வெறிபிடித்த 'அங்கத் சிங்க்' தன் சாதியின் கௌரவத்தை காப்பாற்ற தன் மகளை தன்
சாதிக்காரர்கள் முன்னாள் நிறுத்தி..தன் மகளின் தலையை வெட்டி எரிந்து தன் சாதி கௌரவத்தை
காப்பாற்றினான்
இப்படி
ஒவ்வொரு மாநிலத்திலும் நாளொன்றுக்கு பல கொடுமைகளும் பெண்ணுக்கு எதிரான வன்முறைகளும்
அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்
ஊடகங்களால் ஓரளவு பேசப்பட்டது ஆனால் பேசப்படாத
எத்தனையோ கொடுமைகள் தெருக்க கூத்துகள்
தினமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதே இந்தியாவை சேர்ந்த அரசியல் வாதிகளை
தவிர எவராலும் மறுக்க முடியாத உண்மை. அரசியல் பலத்திற்காக மதம், இனம் என்பதை பகடைக்காய்களாக
பயன்படுத்தி பணம் பார்க்கும் அரசியல் உத்தி எந்த நாட்டிலும் இல்லை நாங்கள் அதற்கு முன்
மாதிரி எனக் கூச்சலிடும் வியாபர தளம்தான் அரசியல் என்பதை நிருபித்தவர்கள் இந்தியாவை
ஆளும் அரசியல் ஜாம்பவான்கள்.
தமிழ்
நாட்டில் தலித், வன்னியர், உடையார், ஜயர் என மத அரசியல், குடும்ப அரசியல், சாதி அரசியல்
என தொழில் ரீதியான அரசியலை முன்னிறுத்தி சேவை என்ற பெயரில் பல இதழ்களும் ஊடகங்களும்
செயல்ப்பட்டு வருவதை நம் கண் கூடாக காண முடியும்
ஊடகங்கள்
விழிப்புணர்வு ஊட்டுகிறோம் என்று எண்ணி பல சாதிய வன்முறைகளை பணம் தொழில் வருவாய் என்ற
குறுகிய கூட்டிற்குள் விழிம்பு நிலை மக்களின் சோகத்தை வியாபார நோக்கத்தின் காரணமாக
அவர்களின் உண்மை நிலை ஒருப்போதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை காரணம் இந்தியாவில் அரசியலின்
பின்னணி தான் ஊடகம், சினிமா செய்தி அனைத்தும், ஒருவேளை அப்படி இல்லாதப் பட்சத்தில்
தொழிலதிபர்களும் அரசியல் வாதிகளும் மட்டுமே இந்த இந்தி தேசமான இந்தியாவை செய்தியாக
தருவது. நான் மேலே சொன்ன சாதிய கொலை வெறி எந்த செய்தி ஊடகங்களாலும் பதிவு செய்யப்படாத
ஒன்று , ஆனால் சமுக வலைதளங்களில் ஓரளவு இச்சம்பவம்
பதிவு செய்யப்பட்டது.
பெண்கள் தான் அணியக் கூடிய ஆடை அரைகுறையானது, ஆபாசம்
நிறைந்தது என்பதை பெண்களை உணராத வண்ணம் அவர்களுக்கு
அப்படி அணிந்தால் மட்டுமே அது அழகை தரும். பெண் என்றால் அழகு என்ற மோகத்தை அவர்களுக்கு
தெரியாமலே உணர்த்தியதுதான் இன்றைய இந்திய சினிமாவும் பெண்கள் சார்ந்த தொழில் விளம்பரங்களும்
குறிப்பாக தான் நடத்தும் அந்த சோப் நிறுவனம் அதிகம் விற்று லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற
காரணத்திற்க்காக பெண்களின் அடையளத்தை மாற்றி ஆணின் மோகத்தை தூண்டி சம்பாதிக்கும் வியாபார அரசியல் கூட்டம் இந்தியாவில்
அதிகம். நீங்கள் எதை தொலைக்காட்சி பெட்டியின் வாயிலாக கூவினாலும் அதனை உடனை வாங்கி
பயன்ப்படுத்த தயாராக இருக்கும் அப்பாவிகள் தான் இந்தியர்கள்.
ஆனால்
மறைந்து ஒழிந்துப் போகக்குடிய சாதிய வன்முறைகளை தீண்டாமை கொடுமைகளை தலை மேல் சுமந்து
கொண்டு வறுமை பட்டினி என்ற சுவரில் இன்னும் சித்திரம் வரைய தெரியாமல் மனதில் பட்டதை
கிறுக்கும் கிறுக்கன்களில் ஒருவன்தான் நான்..நானும் ஓர் இந்தியனே.
No comments:
Post a Comment