I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday, 31 March 2013

இந்திய இரயில்வேயின் தானியங்கி பயணச்சீட்டு திட்டம் தோல்வி


இந்திய ரயில்வே துறையின் தானியங்கு பயணச் சீட்டு திட்டம் தோல்வியடைந்து: மக்கள் அவதி

 சென்னையின் அநேக ரயில் நிலையங்களில் காலை வேளைகளில் பயணச் சீட்டிற்க்காக ரயில் பயணிகள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுக்கிறது, இதனை தடுக்க இந்திய ரயில்வே துறை தானியங்கு இயந்திரம் முலம் பயணச் சீட்டு பெறும் முறையை அறிமுகப் படுத்தியது. தாம்பரம் தொடக்கி கடற்கரை மார்க்கம் வரை 17 ரயில் நிலையங்களில் இச்சேவை அறிமுகப்பட்டுத்தப்பட்டது., இத்திட்டம் அலுவலகம் செல்வோர், புறநகர் ரயில் பயணிகளிடம் அதிக வர வெற்பை பெற்றது, இச்சேவையை பெறுவதற்கு ரூபாய் 100 கட்டணமாக செலுத்துவதன் மூலம் தானியங்கு இயந்திரத்திலிருந்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். இதனால் மக்கள் அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை ஆனால் தற்ப்போது அணைத்து ரயில் நிலையங்களிலும் பழுதடைந்தே காணப்படுகிறது, அது மட்டும் இல்லாமல் பதிவு அட்டைகளை சரியாக ரீசார்ச் செய்ய போதிய வசதிகள் இல்லை எனவே பொது மக்கள் பயன் பெரும் வகையில் ரயில்வே துறையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment