தனி ஈழம் கோரி தமிழ்நாட்டில் கல்லூரி
மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்வேறு தொடர்ப் போரட்டங்களியில்
ஈடுப்பட்டு தங்கள் ஆதரவை அறிவித்து வரும் நிலையில் , சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்
திங்கள்கிழமை தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை சேப்பாக் வளாகத்தில் தொடர்ந்தனர்
. மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளாக இலங்கையில் தனி ஈழம் அமைந்திட இந்தியா தனது
ஆதரவை அளிக்க வேண்டும் , ஐ.நாவில் பொது வாக்கெடுப்பு நடத்தி ராஜபக்சேவை
போர்குற்றவாளியாக அறிவித்திட வேண்டும், மேலும் இலங்கைக்கு இந்தியா
பொருளாதாரத்தடையை விதித்திட வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி தத்தம்
கருத்துக்களை உணர்வு பூர்வமாக பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக
பொறுப்பாளர்கள் மற்றும் துணைவேந்தர் சமரச பேச்சில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்தது.
இந்திய ஜனநாயகத்தில் சுதந்திர போராட்டம் , இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்
நாட்டின் மிக முக்கியமான போராட்டமாக மாணவர்களின் இத்தகைய கவனம் நிரைந்த போரரட்டம்
தமிழக ஊடககங்களின் மத்தியில் பெரிதும் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது என்பது
யாராலும் மறுக்க முடியாத உண்மை.
No comments:
Post a Comment