I have an idea to create the world the way you want, so be part of this forum...

Wednesday, 6 March 2013

கே.ஜீ.எப் தமிழர்களின் வேதனை- கள ஆய்வின் அனுபவம்

    
       கி.பி 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குப்தர்களின் ஆட்சியில் ஏற்பட்ட கனிம தேடுதல் வேட்டையின் விளைவுதான் இந்த தங்க சுரங்கம் என்கின்றனர் சுரங்க வல்லுனர்கள்.  1807 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அதிகாரிகள்  பெங்களூர் கண்டோன்மெண்ட் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காகவும், கட்டுமானப்பணிகளுக்காகவும் மற்றும் ரயில் பாதைகள் அமைக்கவும்   தமிழ் மக்களை  வேலைக்கு அமர்த்தினர். இந்த காலகட்டங்களில் தான் பெங்களூரின் தலைமை செயலகம் "Vidhana Soudha" கட்டப்பட்டது.  ஆங்கிலயர்களின் ஆட்சிக்குப்பின்  ஆற்காடு முதலியார் கண்டோன்மெண்ட் பகுதிகளில் உள்ள பல பொரம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தார் மேலும் பல  பணிகளை தமிழ் மக்களை வைத்து செய்து முடித்தார். இதனை தொடர்ந்து அநேக தமிழ் மக்கள் இருபதாம் ஆம் நூற்றாண்டிற்க்கு முன்பு இருந்தே கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்திருகின்றனர்.      
         
முதல் தலைமுறை சுரங்க  பணியாளர்கள் பல இன்னல்களை தொடர்ந்து அனுபவித்துள்ளனர் . நிம்மதி இல்லாத உறக்கம், உறைவிடம் மற்றும் உழைப்புக்கு  இல்லாத கூலி என அதன் பட்டியல்களை அடுக்கி கொண்டே போகலாம். ஜான் டெய்லர் மற்றும் கோ என்ற நிறுவனம்  1880  இல் கோலாரில் தங்கம் கிடைப்பதை அறிந்து தங்க சுரங்கம் தோண்டும் வேலைகளில் ஈடுப்பட்டது, இதனை தொடர்ந்து 1956 ம்  ஆண்டு முதல் மைசூர் மாநில அரசு அவ்வேலைகளை எடுத்து நடத்தியது, பின்னர் 1960 களின் தொடக்கத்தில் இச்சுரங்கம்   தேசியமயமாக்கப்பட்டது.  இங்கு வாழும் தமிழ் மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வாழ்ந்த போதிலும் அவர்களுக்கிடையே  மொழிப்பிரச்சனைகள், பண்பாட்டு சிக்கல்கள் மற்றும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களை வேறுபடுத்துதல் போன்ற பிளவுகள் புலம் பேயர்ந்த தமிழர்களின் வாழ்கையில் இன்றும் தொற்றி கொண்டுதான் இருக்கிறது. காலனியல் ஆட்சியின் போதும்,  இப்போதும் மக்கள் சுகாதார மற்ற குடிநீரை குடித்து கொண்டும், குடிசைகளை விட மோசமாக தோற்றமளிக்கும் துத்தநாகம்  தாளால் (zinc sheet) செய்யப்பட்ட 10x20 அடி அல்லது 15x20 அடி அளவு அறையில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறு தொழிலாளர் காலனிகளில் ,போதிய கழிப்பிடம் மற்றும்  வடிகால் வசதிகள் இல்லாமல், நினைத்தே பார்க்க இயலாத துயர வாழ்கையை வாழ்ந்து இருகின்றனர். குறிப்பாக 1520 விடுகள்  கொண்ட தொழிலாளர் காலனிகளில் ஒரே ஒரு கழிவறை மட்டும் இருந்திருகிறது மேலும் நச்சுத்தன்மை நிறைந்த தொழிற்சாலை கழிவுநீர் பாயும் துர்நாற்ற நிரோடைகளின் அருகில் வாழ்ந்திருக்கிரர்கள் என்பதை கேள்விப்படும் போது ஒருகணம் மனது துடித்து  போகும் என்பது உறுதி. ஆங்கிலயர்களின் வியாபார எண்ணம், இந்தியாவின் பல இயற்கை வளங்களை அடையாளமில்லாமல் சிதைத்து விட்டது.  இந்திய மக்களை இன வாரியாக, மொழி வாரியாக , பண்பாட்டு வாரியாக பிரிக்க காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலயர்கள். அப்படிப்பட்ட அரசியல் சிதைவுதான் கோலார் நகரம். தங்களின் ஒவ்வொரு தெருவுக்கும் ஆங்கில மொழி பெயர்களை வைத்து, இதுதான் வாழ்கை என்ற புது அர்த்தத்தை இலவசம் என்ற மாற்று வழியில் வழங்கி மனித உழைப்பினை, இயந்திரத்தின் வேகத்தை விட வாங்கியதற்கு அளித்த கூலி தான் என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. அதன் விளைவாக தான் இன்றைய அரசும் அதனை தொடர்ந்து இனம் பிரித்து ஒரு கண் பார்வையுடன் அவர்களின் உரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகிறது.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக திகழும் கோலார் நகரம், அங்கு பணியாற்றும் மக்களுக்கு போதிய கல்வியை அளிக்காததால் இளைஞர்கள், வேலை வாய்ப்பின்றி கூலி வேலைகளுக்காக பெரு நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்து செல்கின்றனர். குறிப்பாக பெருவாரியான மக்கள் தலைமுறை தலைமுறையாக கொத்தடிமைகளாகவே பினாமி முதலாளிகளிடம் வேலை செய்து தங்கள் கடனை வாழ்நாள் முழுவதும் அடைத்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.  


         கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக திகழும் கொலர் நகரம், அங்கு பணியாற்றும் மக்களுக்கு போதிய கல்வியை அளிக்காததால் இளைஞர்கள், வேலை வாய்ப்பின்றி கூலி வேலைகலுக்காக பெரு நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்து செல்கின்றனர். குறிப்பாக பெருவாரியான மக்கள் தலைமுறை தலைமுறையாக கொத்தடிமைகளாகவே பினாமி முதலாளிகளிடம் வேலை செய்து தங்கள் கடனை வாழ்நாள் முழுவதும் அடைத்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.  
  

                     


No comments:

Post a Comment