தேனி
மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எனது சிந்தலைச்சேரி கிராமத்திலிருந்து சுமார்
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பார்ப்பதற்கு பிரமிப்பை தரும் அளவிற்கு 550 அடி
உயரத்தில் ஓர் மலை (சாலமலை) உள்ளது. மலையின் உச்சியில் கண்ணைக் கவரும் வகையில்
தொல்லியல் அமைப்புடன் கட்டப்பட்ட சனி பகவான் கோயில் அமைந்துள்ளது . எனது பள்ளிப் பருவத்திலிருந்தே
அடிகடி "சாலமலைக்கு " நண்பர்களுடன் சென்று வருவது வழக்கம், ஆனால் நான்
மேற்ப்படிப்பிர்க்கு வெளியூர் சென்றதிலிருந்து என்னால் அங்கு சில - பல காரணங்களால்
செல்ல முடியாமல் போயிருந்தது, நேற்று திடிரென நண்பர் ஒருவர் சாலமலை சென்று வருவோமா
என்றார், உடனே நானும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு செய்தி சேகரிக்கலாம் என்று
நினைத்து மகிழ்ச்சியுடன் கிளம்பினேன்.
மலை
கோவிலின் உச்சிக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஹிந்து மத
சகோதரராகள் மற்றும் மலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் , இளம்பெண்கள்
என ஏராளமானோர் கூடுவது வழக்கம் , ஆனால் நேற்று சென்றிருந்த போது ஒருவரையும்
காணவில்லை, குறிப்பாக உள்ளே சென்றவுடன் வனத்துறையின் எச்சரிக்கை ஒவ்வொரு
பாறையிலும், சிவப்பு நிற வண்ணத்தினால் "பொங்கல் வைக்காதீர்", "தீ
மூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என பல்வேறு முன்னறிவிப்பு
வசனங்களை எச்சரிக்கையாக பதிவு செய்திருந்தனர். மேலே சென்றால் எதோ வழிதவறி வந்து
விட்டோமோ என்ற உணர்வு நண்பர்கள் அனைவருக்கும்.
நான்
சிறுவனாக இருந்த காலகட்டங்களில் அங்கு சந்தித்த முதியவர் ஒருவர் சொன்னார்
மலையிலருந்து சுருளி அருவிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், மேலும் 40 வருடமாக
நல்ல பாம்பு மலையில் வாழ்ந்து வருவதாகவும் சொன்னார், ஆனால் நேற்று நான்
சென்றிருந்த போது சிறு வயதில் பார்த்த பல சுவரஸ்யமான கட்டமைப்பினை பார்க்க
முடியாமல் போனது வருத்தமே! . அதே சமயம் செல்லும் வழியில் நூற்றிற்கும் மேற்ப்பட்ட
காற்றலைகள் அங்கும் இங்குமாக!!!, அப்போதுதான் புரிந்தது வறட்சிக்கான காரணம்
என்னவென்று ...
காற்றலைகள்
நீர் வளத்தை உறிஞ்சி விடும் என்று கூட அறியாது மெத்தனமாக பண முதலாளிகளை அனுமதித்தன் விளைவு
நிலப்பரப்பில் நீர் வரத்தின்றி பயிர்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக வாடி
நின்றன, அதைக்கண்ட நான் எதற்கு சென்றேனோ அதை மறந்து வீடு திரும்பினேன் .
No comments:
Post a Comment