சென்னையிலிருந்து
தேனி வருவதற்குள் என் பலத்தில் பாதியை இழந்து விட்டேன் ..ஐந்து ஆண்டுகளாக படித்த
புத்தகங்களை பேருந்தில் வைத்து பத்திரமாக வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்குள் ஒரு
வழியாகிவிட்டது .. வரும் வழியில் நான் பார்த்த தமிழகத்தை உங்களோடு சற்று பகிர்ந்து
கொள்ள ஆசைப்படுகிறேன்.. கோயம்பேடு பஸ் நிறுத்தத்தை தாண்டிய ஐந்து
நிமிடங்களிலிருந்து தாம்பரம் நிறுத்தத்தை கடப்பதற்குள் சுமார் நான்கு மணி நேரத்தை
தாண்டியது, ஜன்னலின் வழி எட்டிப்பார்த்தால் குறைந்தது ஐம்பதாயிரதிற்கும் அதிகமான
அரசு+ தனியார் பேருந்துகள், கனரக வாகனக்கள் மற்றும் சொகுசு கார்கள் அனைத்தும்
சென்னை எல்லையை கடக்க படும்பாடு பெரும்பாடு தான் போலும் . பின்னர் பிரச்சனை என்ன
வென்று வினவினால் அருகில் இருந்த அண்ணன் சொன்னார் , தனியார் பேருந்துகள் அனைத்தும்
அவர்களிடம் முன்பதிவு செய்த பயணிகளின் நிறுத்தங்களில் நின்று அவர்களை ஏற்றி கொண்டு
செல்வதால் தான் இந்த போக்குவரத்து நெரிசல் என்றார் . அந் நெரிசலை முறையாக கையாண்டு
சரி செய்ய போதிய போக்குவரத்துக் காவலர்களை நம்மால் காண முடியவில்லை..ஆனால்
ஆங்காங்கே சில காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டிருப்பதை காண முடிந்தது. இரவு
ஒன்பது மணிக்கு கிளம்பிய நான் காலை எட்டு மணிக்கு தான் திருச்சியை வந்தடைந்தேன்
..யோசித்து பாருங்கள் தேனிக்கு எப்போது வந்து இறங்கியிருப்பேன் என்று ..
அரசு
அம்மா உணவகத்தை ஆரம்பித்ததன் நோக்கமே தனியார் உணவகங்களில் அதிகமாக மின்சாரம்
செலவிடப்படுகிறது என்று தான் அதேப்போல் தனியார் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி
வைத்து அரசுப்பேருந்துகளில் பயணிகளின் வசதிகேற்ப தரமான எஞ்சின் பொருந்திய விரைவு
பேருந்துகளை இயக்கினால் தமிழகம் விரைவில் தன்னிறைவு பெரும் என்பது பயணத்தில்
என்னோடு அமர்ந்திருந்த நண்பரின் கருத்து ...
அண்ணன்
சொல்றதும் சரிதான்.. அம்மா விரைவு பேருந்து விரைவில் இயக்கப்படலாம்
No comments:
Post a Comment