தேடலுக்கான சமூகத்தில் தனக்கான இடத்தை அடைய
பாடுபடும் மனிதன் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அதன் பயனை அடைந்து மடிகிறான்
ஆனால் அவனது உறுப்புகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளன என்பன
குறித்த விழிப்புணர்வு இன்றைய இளைஞர்கள் உட்பட பலருக்கு தெரிவதில்லை
தமிழகத்தில் முதல் முறையாக மூளைச்சாவு உடல்
உறுப்பு மாற்று திட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
இதற்கான தலைமை அலுவலகம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு
வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு
அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல்,கண்கள்
உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு
பொருத்தப்படுகிறது.
விபத்தில் அடிபடுதல், மூளையில் ரத்தக் குழாய் வெடித்து
"ஹெமரேஜ்' நிலை அடைதல் அல்லது
மூளையில் ரத்தக்குழாய் அடைபடுதல் போன்றவற்றால் நோயாளிகளுக்கு மூளைச்சாவு
ஏற்படுகிறது.
மனித உடலில், இருதயம் நின்ற பின் பெறப்படும் உறுப்புகளால்
பயனில்லை. கண்களை மட்டும் நான்கு மணி நேரத்திற்குள் பெறலாம். ஹிதேந்திரன் என்ற
மாணவன் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மாணவனின்
சிறுநீரகம்,கண்கள், இதயம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை பெற்றோர்
தானம் செய்தனர். அதன்பின், தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை
தானம் செய்வது அதிகரித்தது.
தமிழகத்தில் 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் இதுவரை மூளைச்சாவு
அடைந்த 454 பேரின் உடல் உறுப்புகள்
தானம் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 69 இதயம், 33 நுரையீரல், 415 கல்லீரல், 825 சிறுநீரகம், 480 இதய வால்வு, 684 கண்கள்,ஒருவரின் தோல் என மொத்தம் 2,508 உடல் உறுப்புகள்
பெறப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இறந்தபின்னும் வாழும் அதிசயம் சொர்க்கத்தில் இல்லை ஆனால் பூமியில் சாத்தியம் என்பதை உணர்ந்து மக்கள் உறுப்புதானத்தை செய்தால் இறப்பு என்பது இயற்கையில் இல்லாதாகிவிடும் என்பது உறுதி
No comments:
Post a Comment