நாம் வாழ பிறரை வஞ்சிக்கும் நமது மணப்பாண்மை நம்மவருள் பலருக்கும் தொற்றி கொண்டு வருவது எதார்த்தம். நாம் அறிவற்று படிப்பின் அவசியத்தையும் அதன் பயிற்சியையும் சரிவர சமூகத்தில் ஒப்ப பயன்படுத்தாமல் இருப்பதை காரணமாக நினைக்கிறேன். மனிதன் தான் வாழும்
ஒவ்வொரு தளத்திலும், அசைவிலும் மதிப்பிடப்படுகிறான், அதே சமயம் சிலர் சந்தர்ப்பத்தை
சரியாக பயன்படுத்தி வெற்றி கொள்கின்றனர் பலர் தோல்வியை மட்டுமே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.
வாய்ப்புகள் கிடைக்க பெற்றாலும் அதனை அவர்கள் பயன்படுத்தி கொள்ள அவர்கள் எடுக்கும்
முயற்சியும், வாய்ப்புகளை வழங்குவது போல் ஏமாற்றும் நிறுவனங்களும் முளைத்து வருவதை
பலரும் அனுபவம் என்ற கட்டுப்பாட்டில் அனுபவித்து வருவது மறுக்க முடியாத நெடுந்தொடர்.
சமூகத்தில் நாம் பிரதாணப்படுத்தும் நிகழ்வுதான் சமூக மாற்றத்திற்கான தீர்வு என எண்ணுவது சிறு பிள்ளைத்தனமானது, சரிவர ஆய்வுக்கு உட்படுத்தாதது; காரணம் சமூகத்தில் வெளிப்படுத்தப்படும் அத்தனை சிந்தாந்தங்களும் சமூகத்தின் குமுறல்கள், ஏமாற்றத்தின் எதிரொலிகள் மட்டுமே ஆகையால் அவைகள் தான் சமூகத்தின் அமைதி என பிரதாணப்படுத்தி மற்றவைகளை புறந்தள்ளுதல் எந்த விதத்திலும் சமத்துவத்தையோ அல்லது சமூக முன்னேற்றத்தையோ பெற்று தராது மாறாக குமுறல்கள் தொடர வழிவகை செய்யும்.
முகநூலில் எத்தனை பேர் சந்தோச நிகழ்வுகளை பகிரிந்து கொள்கின்றனர்? எத்தனை பேர் புலம்பல்களையும் எண்ணம் கலந்த ஏக்கத்தையும் மட்டுமே பதிவிடுகின்றனர் ? எத்தனை பேர் பதிவுகளை படித்து விருப்ப குறியை மட்டும் தட்டி செல்கின்றனர்? ஏன் இதை இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செய்கிறார்கள்? மனிதனுக்கான உணர்ச்சிகள் மாயமானவையா? அல்லது சமூக பொது தளத்தில் மக்கள் அவர்களுக்கான தேவையை, தேடலை எதை கொண்டு தெரிவு செய்கிறார்கள்? என நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
தேடலை பற்றி பேசும்போது முகம் தெரியாத உணர்ச்சியை முக்கியபடுத்தி பேச வேண்டியிருக்கிறது. விலங்குகளை போன்ற ஒரு நாடோடி இன்று வளர்ச்சி மாயையில் சிக்கி தன் உறவுகளையும் உணர்ச்சிபட வைக்கும் கேலிக்கை பொருளாக மாற்றிவிட்டான். எதார்த்தம் இங்கு ஏழனமாக பார்க்கப்படுகிறது. தொழில் என்ற போர்வையில் யாரையும் சுருட்டி படுத்து கொள்ள நினைக்கும் சூழ்ச்சி நிறைந்த உலகமாகி போனது மனித வாழ்க்கை.. அதற்கு அரசு என்ற கட்டமைப்புதான் மூலதனம் என நான் கருதுகிறேன், மனிதன் நாகரிகமாக்கப்பட்டது தவறு அல்ல ஆனால் என்றைக்கோ நடந்த தான் சம்பந்தப்படாத ஒன்றை காட்டி மாயை உலகத்தில் தன்னை இணைத்து கொண்டது ஏன்?
முகநூல் போன்ற சமூக வலைதலங்களை பற்றி விமர்சிக்கும் போது அதன் பயன்பாட்டை பாராட்டும் மனிதர்கள், முகநூல் ஒட்டு மொத்த உலக மக்களையும், சமூதாயத்தையும் இணைக்கும் பாலம் அதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் எப்படி பயன்படுத்துவது என்று? அப்படி சொல்பவர்களின் கருத்து ஏற்கத்தக்கது என்பது
எனது வாதம்!
இப்படிபட்ட பார்வையினாலே நமக்கான அடையாளத்தை இழந்து வருகிறோம். தொழில் வளர்ச்சி காரணமாக புதிய பயண்பாட்டு கருவிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாட்கள் நகர நகர பலருக்கு தேவையற்ற சிலருக்கு தேவைப்படுகிற பயன்பாட்டு கருவிகள் உட்படுத்தப்படுகின்றன, அப்படி உட்படுத்தப்படும் கருவிகள் தேவையற்ற சிந்தனைகளை முகநூல் பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் விட்டு செல்கின்றன அதன் விளைவு பட்டி தொட்டியெல்லாம் முகநூலும் சமூகத்திற்கான ஒரு பாதிப்பாக உருவாவதை நம்மால் பார்க்க முடியும். நேற்று நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்த போது அவரிடன் சொன்னேன் தமிழ் சினிமா அழிவின் பாதையில் தான் நம்மை அழைத்து செல்கிறது என்று உடனே அவர் மறுமுனையில் அப்படி ஒன்றும் இல்லை தமிழ் படங்களில் தான் எதார்த்தம் சரியாக கையாளப்படுகிறது?
உடனே நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை முதலில் கொச்சைபடுத்தியது தமிழ் சினிமா தான். முதல் இரவு என்பது தாம்பத்தியத்தின் ஒரு அங்கம் ஆனால் 80களில் வந்த அனைத்து திரைப்படங்களும் கணவன், மனைவி உறவினை பால், அலங்கரிக்கபட்ட மெத்தை, கொஞ்சுதல், விளக்கை அணைத்தல் அப்பரம் ஒரு கவர்ச்சியான பாட்டு இதன் விளைவு ஆணும் பெண்ணும் திரைப்படத்தை பார்த்தே காதலையும், காமத்தையும் புரிந்து கொள்ள கூடிய வகையில் அமைய பெற்றிருக்கும்.
மனிதனின் கட்டுப்பாடற்ற தேடல் சமூக மாற்றத்தை மட்டும் இன்றி சமூக விளைவுகளையும் அதிகரிக்கும் என்பது நிதர்சனம் என எங்களுடைய கருத்துகளை பரிமாறி கொண்டோம்.
No comments:
Post a Comment