செய்தி விரைவு
பெற்றிருப்பதை தேர்தல் நாட்களில் தான் நம்மால் தெளிவாக காண முடிந்தது அப்படிப்பட்ட
தேவைக்கதிகமான வேகத்தையும், உழைப்பையும் ஊழியர்கள் காட்ட மக்கள் பல நேரங்களில் சுய
சிந்தனையற்று வழிநடத்தப்பட்டார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. நாம் பார்க்கும் பல
நிகழ்வுகள் கசப்பாக இருந்தாலும் அவை உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. ஊடக சுதந்திரம்
இந்த நாட்களில் ஊழியர்களுக்கான செய்தி தேவையை பூர்த்தி செய்கின்றனவாக இருந்தனவா
என்பதை நாம் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஊடகத்துறை, சமூகம் சார்ந்து கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம்
பெற்றிருந்தும் கூட ஊழியர்கள் இந்த துறையில் எப்படி நடத்தப்படுகிறார்கள், தேர்தல்
நாட்களில் எப்படி வழி நடத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் ஊடக சுதந்திரத்தின் வீழ்ச்சி
என சொல்லி கொண்டே போகலாம். கொள்கை அடிப்படையில் செயல்படுவதுதான் புத்தியுள்ள
மனிதனின் பலம் என மூத்தோர் சொல்வது போல் ஊடக அரசியல்வாதிகள் தங்களது சுய தேவைக்காக
ஊழியர்களை அடிமைப்படுத்த தவறியதில்லை. நாம் இங்கு முன் வைக்கும் கருத்துகள்
ஊடகங்களில் பணி செய்யும் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் கூட செய்தி இல்லாத
நாட்களில் உள் நோக்கம் இல்லாத சிறு சந்திப்பை கூட பெரிதாக்கும் நம் முயற்சி
அனுபவம் சார்ந்ததா அறிவு சார்ந்ததா அல்லது நிறுவனத்தின் கட்டளையா என்பதை ஆய்வு
மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினால் வரவேற்கதக்கது.
ஜனநாயக திருவிழாவில் ஊடக
பண்பாடு எப்படி இருந்தது என்பதையும் மாற்றத்திற்கான தேவையை ஊழியர்கள் எப்படி
அணுகினார்கள் என்பதெல்லாம் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் தொகுத்து வழங்கி
கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம். பல்வேறு இடங்களில் ஊடக நண்பர்கள் கட்சி
அமைப்புகளாலும், சிறு இயக்கங்களினாலும் தாக்கப்பட்டிருப்பது வேதனைக் குரியது. அதே
சமயத்தில் ஊழியர்கள் தொடர்ந்து வழிநடத்தப்பட்ட விதம் மற்றும் தேவைக்கேற்ப
தயாரித்து கொள்ளாத அணுகுமுறை எல்லாம் மாற்றத்திற்கானவர்கள் சிந்திக்க வேண்டியவை.
மாவட்ட செய்தியாளர்களின்
உழைப்பு செய்தி அறையில் எப்படி எதிரொலிக்கப்படுகிறது, குறிப்பாக தேர்தல் நாட்களில்
அவர்கள் சந்தித்த வழிமுறைகள், பிரச்சனைகள், சுவாரஸ்யமான அனுபவங்கள் ஊடக
ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எப்படி எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்பதனை பற்றி
ஆராய வேண்டிய தருணம். முதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறை கணினிகளை போல்
காலத்திற்கேற்ப நம் சிந்தனைகளும், புரிதல்களும், விருப்பங்களும் தொழில் நுற்பம்
சார்ந்து விஸ்பரூபம் எடுக்க ஊடக சமூதாயம் இணைய இதழியல் மற்றும்
தொடர்பியலை பயன்படுத்தும் விதமும் மாவட்ட, மாநில செய்தியாளர்கள் அணுகும் முறையும்
எப்படி இருக்கிறது? அல்லது வழக்கம் போல் தலைமை கட்டளையிடுவதை எடுத்து கொடுக்கும்
சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களாக வழிநடத்தப்படுகிறோமா? பதில் சொல்லும் தருணத்தில்
இருக்கிறோம் என்பதை அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.
ஊடக நிறுவனத்தின் பெயர்
சொல்லி கேள்வி கேட்கும் நிலை தமிழகத்தில் எப்போது மாற போகும் என தெரியவில்லை.
தேசிய ஊடகங்கள் எதை செய்கின்றனவோ அதை திருத்தாமல் செய்ய முயற்சிக்கின்றோம்.
இதழியல் தொடர்பியல் சார்ந்த புரிதலுக்கான தேவையை அறியாத ஊழியர்கள் இங்கு அதிகம் என
சந்தேகிக்கவும், விமர்சிக்கவுமே தோன்றுகிறது. தொழில்நுட்பம் போன்ற காரணங்களை
விமர்சிக்கவில்லை, எனது கவலை ஏன் ஊடகங்கள் நிறுவனத்தின் வட்டத்தை சுற்றி
அலைகின்றன.
ஏன் தொழிலதிபர்கள்
மட்டுமே ஊடக நிறுவனர்களாக திகழ்கிறார்கள், சிற்றிதழ்கள் ஏன் வெறுமையையும்,
கொள்கையும் மட்டுமே பேசி மடிகின்றன என்பதே...
10 நிகழ்வுக்கான அழிவை
தேடி தந்து 3 நற் செயல்களில் ஈடுபடுவதால் எத்தனை பேருக்கு நன்மை? என்ற கேள்வியை
எழுப்ப வேண்டிய கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம்.
பரப்பரப்பாக ஊடக அதிகாரிகளின் கட்டளைக்கினங்க ஓடி செய்தி அனுப்புவதற்கு பெயர்
பத்திரிக்கயாளர் இல்லை, மாறாக நிகழ்வை அணுகும் முறையிலான பார்வையில் தான் அதன்
திருப்தி உள்ளது தோழர்களை... முடிந்தால் அதற்கான முயற்சிகளை எடுப்போம்.
நன்றி
ஸ்டீபன். வி
No comments:
Post a Comment