I have an idea to create the world the way you want, so be part of this forum...

Wednesday, 9 April 2014

கிழிக்கப்படுமா மோடியின் திரை

ஊர் சுற்றும் ஊழல்வாதி யார்? ஊடகங்கள் மோடி வேடம் போடுவது ஏன்?

ஊழல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் அடையாளமா?

கெஜ்ரிவால் அரசியல் விளம்பரம் தேடுகிறார் என்றால் ராகுல், மோடி செய்வது என்ன?

காங்கிரஸ் சின் நிலைப்பாட்டை எதிர்க்கும் அல்லது குறைகளை சுட்டி காட்டும் பாரதிய ஜனதா கட்சி எப்படி அந்த குறைகளை, தட்டுப்பாடுகளை சரி செய்ய போகிறது என தங்களது தேர்தல் அறிக்கையில், மேடை பேச்சுகளில் தெளிவுபடுத்தாதது ஏன்?

மோடியை நம்மூர் மு.க. அழகிரியுடனும், விஜயகாந்த் உடனும் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

பாரதிய ஜனதா கட்சி ஒரு வேளை வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய கூடிய வலிமை பெற்றிருக்கிறதா?

இப்படி பல கேள்விகள், சந்தேகங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைவருக்கும் இருக்கும் சூழலில் அதன் உண்மை முகத்தை கார்பரேட் நிறுவனங்களும், ஊடகங்களும் அதன் தொழிலாளர்களும் மறைப்பது ஏன், மோடி அலை வீசுவதற்காகவா? குஜராத் மாநிலம் அமைப்பு ரீதியில் அதன் கலாச்சார மொழியில் உழைப்பில் மற்ற மாநிலங்களை விட வேறுபட்டவர்கள் என்பதை மறந்து தமிழக முட்டாள் அரசியல்வாதிகள் வழக்கம் போல் பைசாவிற்காக கோர்வையாக வாய் விளையாட்டுகளை காண்பிப்பது தொடர் கதை ஆகிவிட்டது

ராமர் கோயில் அறிக்கை சிறுபான்மையினரை எந்த விதத்திலும் பாதிக்காது என மோடி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி கூறியுள்ளார். அதுபோக திமுகவினை விமர்சித்தால் கூட பரவாயில்லை கலைஞரை கிண்டலாக 91 வயது நிரம்பிய முதியவரை நம்பிதான் அந்த கட்சி உள்ளது என நக்கலாக பதில் சொன்னது அவர் சார்ந்த கட்சிக்கும் கொஞ்சம் ஓவர் தான். விஜயகாந்தையும், அன்புமனியையும் நம்பி கலம் இறங்கும் இவர்கள் இதையெல்லாம் பேச தகுதிபடைத்தவர்களா என்பதை நீங்களை யோசித்து பாருங்கள். மோடி தனி நபர் அல்ல. சாதி மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை மோத விட்டு, பார்ப்பன-இந்து மதவெறி பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலைவன். இந்துத்துவத்தை குஜராத்தில் சோதித்து ருசிகண்ட காட்டுப் பூனை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை திட்டமிட்டு புறக்கணித்து, டாடா, அம்பானி, அதானி, எஸ்.ஆர், ஃபோர்டு, மாருதி என கார்ப்பரேட் முதலைகளுக்கு குஜராத் வளங்களை தாரை வார்த்தது தான் மோடி உருவாக்கிய வளர்ச்சி. அதனால் மேட்டுக்குடி வர்க்கமும், கார்ப்பரேட் முதலாளிகளும் மோடியை உச்சி முகர்ந்து கொண்டாடுகின்றனர். தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி இங்கே மாருதி சுசுகி தொழிலாளர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, ஜப்பானுக்கு நேரில் சென்று எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தார். 4.5 கோடி சில்லறை வணிகர்களை அழிக்க வரும் வால்மார்ட் பற்றி இன்று வரை மோடி வாயைத் திறக்கவில்லை. தேர்தல் அறிக்கை வெளிவந்த அடுத்த நாளை வால்மார்ட் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் 50 இடங்களில் 4 ஆண்டுகளுக்குள்  வால்மார்ட் தனது வர்த்தகத்தை துரிதப்படுத்தும் போன்ற செய்திகள் வெளிவந்தன.

நாடு முழுவதும் அண்மை ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக நடத்திய ஊழல்களில் காங்கிரசின் நிலக்கரி, அலைக்கற்றை ஊழல்கள் முதல் பாஜக-வின் கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை வரை அனைத்துமே தனியார்மயத்தின் பெயரால் முதலாளிகள் கொள்ளையடித்த ஊழல்கள் தான். இந்த தனியார்மய கொள்கையில் காங்கிரசுக்கும பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை என்பதோடு அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக ஒரு துறையையே ஏற்படுத்தியது வாஜ்பாயின் பாஜக அரசுதான். சுமார் 42 லட்சம் ஏக்கர் அரசு நிலம் பல்வேறு காரணங்களுக்காக டாடா, அம்பானி, எஸ்.ஆர், மிட்டல், அதானி, அமெரிக்க மெக்டோனால் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. பருத்தி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய குஜராத்தின் முக்கிய விவசாய உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 152 கிராமங்களைப் பிடுங்கி பல்லாயிரம் ஏக்கர் வளமான விலை நிளங்களைப் பறித்து (64 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் தனியார் அணு மின்நிலையத்திற்கு) தாரை வார்க்கப்பட்டுள்ளன.

மோடி, ரிலையன்ஸ் குழுமத்திற்கு எரிவாயு திட்டத்தில் காட்டியுள்ள சலுகைகள் அலைக்கற்றை ஊழலை விட மிகப்பெரிய ஊழலாகும். சிங்கூரிலிருந்து விரட்டப்பட்ட டாடா நானோ தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற குத்தகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் மானியமாக மட்டும் 35 ஆயிரம் கோடி வழங்கினார். குஜராத் அரசிடமிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்த முதலாளிகள் பலர் தொழில் தொடங்காமல் வீட்டு மனைகளாக்கி விற்று கொள்ளைடித்துள்ளனர். 56 மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பறித்து முந்திரா என்ற தனியார் முதலாளிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேருக்கு வாழ்வளித்த வெங்காய சாகுபடி நிலத்தைப் பறித்து நிர்மா சிமெண்ட் கம்பெனிக்கு கொடுத்ததும் மோடி தான். ஆனால் வேலை கிடைத்ததோ வெறும் 416 பேருக்கு மட்டும் தான். குஜராத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில், மோடி ஆட்சியில் தான் அரசு சொத்துக்கள் அதிகம் சூறையாடப்பட்டது என்பதோடு மிகப்பெரிய ஊழல் ஆட்சியும் இது தான் என்பதை பல்வேறு ஆய்வுகளும் தணிக்கை அறிக்கைகளும் அம்பலப்படுத்தியுள்ளன. 2011-ம் ஆண்டு மட்டும் 17 ஊழல்களை தலைமை தணிக்கைத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். வாழ்வாதார அழிப்பு, கார்ப்பரேட் சூறையாடல், ஊழல் இவற்றை மாபெரும் வளர்ச்சி, நாட்டிற்கே முன்மாதிரி என கூசாமல் பொய் பிரச்சாரம் செய்து கொண்டு விளம்பரத்திற்காக ஊடகங்கள் உதவியோடு மோடி அலை விசூகிறது என வைக்கோ போன்ற தலைவர்கள்  முதல் அக்கட்சியினர் பசியோடு வேலைக்கு கிழம்பும் தாய் மார்களை ஏமாற்றும் கள்ள நாடகமும் அரங்கேறி கொண்டிருப்பது அபத்தம்.


கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் குஜராத் எந்த மட்டத்திலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது வளர்ச்சி பெற்றதாக இல்லை என்பதை அங்கு சென்று வந்தவர்கள் கூற கேள்விபட்டேன். அப்படி இருக்க மோடி போன்ற வார்த்தை விளையாட்டு கலைஞர்கள் எப்படி இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்கள் என்பது கேள்வி குறிதான். பாரதிய ஜனதா கட்சியின் மேடை வாதம் முதல் தேர்தல் அறிக்கை வரை எல்லாம் பொத்தாம் பொதுவாகத்தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர மக்களை தெளிவுபடுத்தும் வகையில் இல்லை என்பதை உண்மை.

No comments:

Post a Comment