நாட்டின்
தலைநகரில் நடந்த கொடுர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 4ல்வருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரேவா கெத்ரபால்,
பிரதிபா ராணி தலைமையிலான அமர்வு வியாழகிழமை தூக்குதண்டனையை உறுதி செய்தது. இச்சம்பவத்தில்
ஈடுபட்ட 6 பேரில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் தானாக தூக்குமாற்றி இறந்ததாக
கூறப்படுகிறது மற்றொருவர் 18வயதுக்கு குறைந்தவறாக இருப்பதால் அவருக்கு தூக்கு தண்டனை
கொடுக்கலாம அல்லது வேண்டாம என விசாரணை குழு பரிசிலித்து வருகிறது.
தூக்கு
தண்டனை தான் தவறுக்கு தீர்வா ?
தவறுதான்
கேள்வி என்றால் குற்றம் தான் அதற்கான பதிலாக இருக்கும் கொடூரமான வகையில் பாலியல் வன்கொடுமை
செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டனை பெற தொடர்ந்து போராட்டம் செய்து வரும் சமூக
நல அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சில விநாடி கால மகிழ்ச்சியை தரலாம்
ஆனால் இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் மற்றும்
அந்த சிறுவன் உட்பட 5 பேரும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள், அவர்களுக்கு
தேவையான கல்வி, சமூக பொருளாதாரம் அதற்கு தேவையான எதனையும் முழுமையாக அரசு பூர்த்தி
செய்யாததும் அவர்கள் குற்றம் செய்வதற்கு காரணமாக இருந்தது . அவர்கள் செய்தது குற்றம்
அதற்கு தவறை உணரும் வகையில் தண்டனை பெற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது
ஆனால் தூக்கு தண்டனை எந்த வகையிலும் தீர்வாகது. தவறுதான் குற்றத்திற்கான வழி அப்படிபார்த்தால்
இன்றைக்கு அனைத்து ஆண்களையும் தான் தூக்கில் போட வேண்டும், எதோ காரணங்களால் தெரிந்தோ
தெரியாமலோ தவறுகளை செய்ய விழைகிறான் என்பதே உண்மை. சரியான பகிர்வு இல்லாத போது தேவையற்ற
சிந்தனைகளும் பெருக்கெடுப்பது வழக்கம் அப்படித்தான் ஆணும் பெண்ணும் போட்டி போட்டு கொண்டு
தவறு செய்ய விழைகிறோம் ஆனால் அவை அனைத்தையும் பெரும்பாலனோர் சரி என்றே நியாயபடுத்துகின்றனர்.
தன் தாய்க்கும் தகப்பனுக்கும் தெரியாமல் கல்லூரியில் தகாத உறவு வைத்து அதனை நட்பு அல்லது
காதல் என நியாயபடுத்தும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்
என்று தெரியவில்லை. சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அவர்கள் உதாரணமாகவும்,
உணரும் வகையிலும் நாட்டிற்கு பயனுள்ள வகையில் சட்டங்கள் இயற்றபட்டால் நன்றாக இருக்கும்
என்பது எனது கருத்து.
உணர்வை
தூண்டும் தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆபாச சினிமா, சமூக வலைதலங்களில் நடக்கும் கூத்துகள்
எல்லாம் சமூகத்தில் நமது பங்களிப்பை பிரதிபலிப்பனவையாக இருக்கிறது என்பதை அறியாமல்
கண்மூடிதனமான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும் அரசு எந்த விதத்தில் நமது வாழ்க்கைகான
முடிவை தீர்மானிக்க முடியும்?
No comments:
Post a Comment