I have an idea to create the world the way you want, so be part of this forum...

Saturday, 8 February 2014

ஆதரவை தேடிய மோடி அலை

இந்தியா போன்ற பண்முகம் கொண்ட நாட்டினை ஆட்சி செய்வதற்கு மோடி தகுதியானவர் இல்லை. 

வரலாற்றை முழுமையாக புரட்டிபார்க்காத, புள்ளி விவரங்களை சரிவர குறிப்பிட்டு பேச தெரியாத கூட்டம் தமிழகத்தில் அரசியல் நடத்தலாம் என்ற கொள்கையில் மோடி என்ற அடையாளத்துடன் களம் இறங்கி இருக்கிறது அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதன் நரேந்திர மோடியின் வண்டலூர் பா.ஜனதா பொதுக்கூட்டம்.

படித்த இளைஞர்கள் பலர் இருக்க மத போகம் கொண்ட ஒரு தலைவன் மக்களின் விருப்பத்திற்கு எதிராக திட்டமிட்டிருக்க கூடிய ஒரு தலைவன் அமைந்தால் கண்டிப்பாக அவர் ஆளும் ஆட்சியில் பல குலப்பங்கள் உருவாகும் அவை எந்த விதத்திலும் இந்தியாவின் கனவை நனவாக்காது, தனியார் மைய கொள்கையில் சிக்கி தவிக்கும் இந்தியா தற்போது மோதியின் முயற்சியால் தனியார் கொள்கைக்கு அடிமையாகும் பின் மோடி என்ற அலை தெருக்கோடி வரை தான் வீசுமே தவிர மக்கள் ஜனநாயக அரசியல் சூழலில் வாழ்வதற்கான அமைப்பை ஏற்படுத்தி தராது என்பது உறுதி. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் குஜராத்தின் உள் அரசியலை கவனித்து இஷ்டம் போல் மக்களின் வாழ்வாதரத்தையும் , இயற்கை வளத்தையும் சுரண்டி கொண்டிருக்கின்ற நான்கு முக்கியமான தனியார்  பெரு நிறுவனங்கள் எஸ்ஸார், ரிலையன்ஸ், அதானி, டாடா அடிமையாக்கி குறைந்த ஊதியத்தில் படிப்படியாக நமக்கான சுதந்திரத்தை பறிக்க வழிவகுக்கும் அதற்கான கைகூலியாக மோடி இருப்பார் என்பது உறுதி.

அடுக்கு மொழி வார்த்தைகளால் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மோடியும், மேடை நாகரிகம் தெரியாமல் உலரும் விஜயகாந்தும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான், காரணம் இருவருமே தங்களுக்கென கொள்கை இல்லாதவர்கள், இவர்களை பதவிக்கு உயர்த்தினால் இந்தியாவை மறைமுகமாக ஆட்சி செய்யும் தொழில் நிறுவனங்கள் கட்டளையிடுவதை உடனை செய்யும் பொம்மைகளாகத்தான் இருவரின் செயல்பாடுகளும் இருக்கும். அரசியல் என்பது சமீப காலங்களில் தொழில்முறை சார்ந்ததாக இருக்கிறது. கூட்டணி கட்சிகள் உருவாவதும் அப்படித்தான். தலைமை பொருப்பும் சேவை மனப்பாண்மை உடையவர்கள் மட்டுமே ஆட்சி நடத்திய காலம் போய் இன்றைக்கு பாதுகாப்பிற்காக பெரு நிறுவனங்கள் தலைமை பண்பை பணத்தாலும் அதிகாரத்தாலும் கையகப்படுத்தி பொம்மை தலைவர்களை பகடைகாயாக பயன்படுத்தி கொண்டு அடையாளப்படுத்தி காட்டும் ஒரு கூட்டு முயற்சியின் உச்ச கட்டம் தான் அரசியல் பிரச்சாரம் என்பது நிறுபனம்.

டீக்கடையில் வேலை செய்த நான் ஏன் பிரதமராக கூடாது என்ற கேள்வியை உருவாக்கிய மோடி அதற்கான பதிலாக டீ விற்பனை கூடங்களை அறிமுகப்படுத்தி தன்னை ஒரு மிகப்பெரிய புத்திசாலியாகவும் நிர்வாக திறமை உள்ளவராகவும் அடையாளப்டுத்தி கொண்டதன் தந்திரம் அவர் எப்படி பட்ட அரசியல் வியபாரி என்பதனை நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

ஹார்ட்வோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தாலும் கள்ளகுறிச்சி பள்ளி கூடத்தில் படித்தாலும் கடின உழைப்பும் அதற்கான முயற்சியும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும் இதை கூட புரிந்து கொள்ள தெரியாத மோடி எப்படி பிரதமராக தகுதியானவர் என தெரியவில்லை..

சோனிய காந்தியும் அவரின் கட்சி நடவடிக்கைகளும் பல நேரங்களில் மக்களுக்கு பலன் இல்லாமல், மந்தமான சூழலை ஏற்படுத்திருக்கின்றன மறுபுறம் ராகுல் காந்தியிடம் சரியான தேடலும் வேகமும் இருக்கிறது, ஆனால் அதற்கான பக்குவமும் சூழலும் அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறதா என்பது கேள்வி குறி.
காங்கிரஸ் அரசை தமிழகம் குற்றம் சாட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு அதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள், தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை, ஆனால் அதனை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி கொண்டு சுமுக தீர்வு காண நினைக்காமல் அதை வைத்து பிளைக்க நினைக்கும் அமைப்புகள், கட்சிகள் ஏராளம். குறிப்பாக தமிழக முதல்வருக்கு உண்மையில் இது போன்ற அத்து மீறல் பிரச்சனைகளில் சுமுக தீர்வு காணும் எண்ணம் இருந்தால் பிரதமருக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு நேரடியாக தலையிட்டு டெல்லியில் அதற்கான முடிவுகளை எட்ட முடியும். ஆனால் இந்த பிரச்சனை தொடர வேண்டும் எண்பதற்காகவே இன்றளவும் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கவே இல்லை என்ற நாடகம் மக்களுக்கு தெரிந்தும் கூட அதனை தொடர்ந்து செய்து வருவது அரசியல் வித்தையா அல்லது மக்களை முட்டால்களாக நினைக்கும் செயல்.

 நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்விகள் :

•         மோடி ஏன் ஊடகங்களில் சாதனை மன்னனாக சித்தரிக்கபடுகிறார்?
•         இந்தியாவை மறைமுகமாக ஆளும் தனியார் பெரு நிறுவனங்கள் ஏன் மோடி சார்ந்த ஊழல் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவர் தண்டனை பெற்று தர முயற்சிப்பதில்லை?
•         மோடியின் பிரச்சார கூட்டங்களில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. தனியார் நிறுவனக்களின் சூழ்ச்சியா அல்லது மோடி அலையின் அச்சமா?
•         மோடி அலை தமிழகத்தை பாதிக்குமா அல்லது சேதராம் அற்ற  வெறும் கண்துடைப்பா?


www.visionsteve.blogspot.com

No comments:

Post a Comment