கடல்
தாயின் சாரல் காற்று, அழகு சேர்க்கும் மெரினா கடற்கரை, பல தலைவர்கள் விரைந்து
செல்லும் காமராஜர் சாலை, கம்பிரமான பல்கலைக்கழக நுழைவாயில், குழந்தைத்தனம் இல்லாத
பேச்சு, அரசியல் பேசி இளைப்பாறிய தூண்கள் ,பார்த்து வியந்த பேராசியரின் அனுபவம்,
உதவி பேராசியர்களின் நட்பு கலந்த கற்பித்தல் திறன், சிரித்த முக-சிவந்த
கண்ணங்களுடன் உலாவும் அழகும் வெட்கமும் பொருந்திய பல்கலைக்கழக பெண் தோழிகள்,
பழகுவதற்கு கிடைத்த அருமையான இதர துறை நண்பர்கள், நாம் அரட்டை அடித்த இணையதள அறை,
மகிழ்ச்சியுடன் தேனீர் பருகும் பாபு அண்ணனின் மரத்தடி தேனீர் கடை, அறிஞயர்
பெருமக்கள் பலர் அமர்ந்து படித்த "மெய்சிலிர்க்க வைக்கும் பல்கலைக்கழக
நூலகம்", இவை அத்தனையும் சாத்தியமான இடத்தில் நானும் என் முதுகலைப்படிப்பை
முடித்தேன் என்பதில் எனக்கும் பல கோடிகளை சம்பாதித்த உணர்வும், ஞாபகமும் ஒரு சில
நேரங்களில் மனதை உரசும் பாடல்களாக வந்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக
இரண்டாண்டு காலத்தில பல பகுதி நேர வேலைகளுக்கு சென்றிருக்கிறேன், அங்கு எனக்கு
கிடைத்த நண்பர்கள் ஏராளம், அவர்கள் கற்றுக்கொடுத்த ஒவ்வொன்றும் என் வாழ்கையில்
என்னை திருத்திக்கொள்ள, என் முயற்சிக்கு உந்துதலாகவும் , என் படிப்பினை நான்
தொடர்ந்து மேற்கொள்ள முழு ஒத்துழைப்பையும் போட்டி பொறாமை அற்ற சுதந்திரத்தினை
கொடுத்தமையால் தான் என் கல்வியை எந்த அச்சம் இன்றி என்னால் தொடர முடிந்தது .
என்
வாழ்கையில் நான் தொடர்ந்து இவை அனைத்தையும் பெற உதவிய பெங்களூரில் என்னுடன் பயின்ற
நண்பர் சுனில், பிரபு அண்ணன், ஜார்ஜ் மற்றும் பள்ளித்தோழன் கருப்பையா என
ஏராளம் அதேப்போல் சென்னையிலும் என் மீது நம்பிக்கை வைத்து என் கல்விக்கு உதவிய
ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர், ஆசிரியர்கள் மற்றும் என்னை எப்போதும்
உற்சாகப்படுத்திய என் அண்ணன் ஜான்பால் , தீபச்செல்வன், சேக்பரீது, அருண் ,
தங்கப்பாண்டியன், ரகுபதி, ஸ்ரீராம், பிரதீப் அண்ணன் அனைவருக்கும் ஓடிய அலைந்த
நாட்களின் ஒரு சில நினைவுகளை பயன்படுத்தி என் நன்றியை உரித்தாக்குகிறேன் .
நான்
தற்போது புதியதலைமுறை தொலைக்காட்சியின் செய்தி பிரிவில் பணிக்கு சேர்ந்துள்ளேன்...
தொடக்கத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இல்லை என்றாலும் நான் படித்த, கற்றுக்கொண்ட
அனுபவத்தின் வாயிலாக ஊடகத்துறையில் பல மாற்றங்களை செய்ய முடியும் என்ற
நம்பிக்கையும், பொறுமையும், திறமையும் உள்ளது என்பதை அறிவேன் ... அதற்கு
உங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு வேண்டும் ... மிகவும் உற்சாகப்படுத்திய என்
முகப்புத்தக நண்பர்கள், என் வலைப்பூக்களை படித்து பாராட்டிய தோழர்கள் அனனவருக்கும்
என் இதயம் கலந்த நன்றிகள்.
என்றும்
உங்கள் நட்புடன்
ஸ்டீபன்
. வி
No comments:
Post a Comment