ஏற்காடு
சட்டமன்ற தேர்தல் வெற்றி மக்கள் விரும்பி அளித்த வெற்றி அல்ல, மாறாக விலைகொடுத்து
வாங்கப்பட்ட வெற்றி என மார்தட்டி தங்களின் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் அரசியல்
தலைவர்களின் நிலைப்பாடு முற்றிலும் மறுக்க முடியாத உண்மையின் வெளிப்பாடு என்றேதான்
கோர்வைபாட வேண்டி இருக்கிறது. மாற்றம் என்ற வார்த்தையின் உட்பொருளை மக்களுக்கு
வெளிச்சமிட்டு காட்டாமல் ஏமாற்றத்தை மட்டுமே ரூசிக்க கூடிய உணர்வை தொடர்ந்து ஊட்டி
வரும் தாயகமாக தமிழகம் திகழ்வது பரிதாபம்.
அதிமுக
சார்பில் சரோஜாவை ஆதரித்து ஏற்காடு தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர்
அவரது பயணத்தை தொடங்குவதற்கு முன்பே அவர் செல்லும் வழியில் அமைய பெற்றிருந்த
வேகத்தடைகளை தற்காலியமாக போக்குவரத்து காவல்துறையினர் அகற்றினர் ,
குறிப்பாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவரது வருகைக்கு 4
மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்ததன்
விளைவு சேலத்தை நோக்கி அவசரசிகிச்சை ஊர்தியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற
இரண்டு அப்பாவி பெண்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும்
முதல்வரின் வருகையை ஒட்டி பள்ளி குழந்தைகளை கட்டாயத்தின் பேரில் பிரச்சாரக்
கூட்டத்தில் கலந்து கொள்ள செய்து கோஷமிடச்செய்தது, மின்னாம்பள்ளி, வெள்ளாகுண்டம்,
வாழப்பாடி, பேளூர், கூட்டத்துப்பட்டி, வலசையூர், அயோத்திப்பட்டினம் ஆகிய
பகுதிகளில் ஓட்டுக்கு இரண்டாயிரத்திலிருந்து, ஜந்து ஆயிரம் வரை கொடுத்து விலைக்கு
வாங்கியது என முறைகேடுகளை அடுக்கி கொண்டே போகலாம். பாவம் இத்தனை ஏமாற்ற
செயல்களுக்கு மத்தியிலும் மக்கள் விரும்புவது பணம்.
மக்களுக்காக
போராடும் தலைவி என புகழாரம் சூட்டி கொள்ளும் தலைவியின் மறுமுகம் கோரமுகமாக
இருப்பதை நினைத்து ஒவ்வோறு முறையும் வெறுப்பு மட்டுமே வருகின்றன.கட்சி பிரச்சார
கூட்டத்தில் தனது சுய அடையாளத்திற்காக பள்ளி குழந்தைகளின் ஆதாயத்தை தேடுவதை
என்னவென்று சொல்வது? கேவளம் பணம், அதிகாரம், முதலாளித்துவம்...
திமுக
சார்பில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஏற்காடு தேர்தலில் பிரச்சாரம்
மேற்கொண்டார், இதனை அடுத்து தற்போதைய ஆட்சியின் இயலாமையினையும், குற்றச்செயல்கள்
தற்போதைய ஆட்சியில் அதிகம் நடப்பதையும் முன் நிறுத்தி வாக்குகளை சேகரித்தார்.
பாவம் எப்படி பேசினாலும் அவரது பருப்பு வேகவில்லை என்பது தான் உண்மை. உழைப்பை
மறந்து தத்தம் பிளைப்பிற்கு மைக் பிடித்து பித்தலாட்டம் செய்யும் அரசியல்
குடுவைகளை நம்பி நமது உழைப்பிற்கான நேரத்தையும் செலவு செய்வதின் விளைப்பாடு பிச்சை
எடுப்பவனின் காசை திருடி சட்டைபையில் போட்டு மாட்டி கொள்ளும் மடத்தனமான செயலை தான்
நினைவு கூறுகிறது. அப்படித்தான் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரத்தையும்
கேவலமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டி இருக்கிறது.
திருடனாய்
பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கண்ணதாசனின் வரிகள் போல்
மக்களாய் பார்த்து மாற்றத்தை தேடாவிட்டால் பண முதலாளிகள் மட்டுமே முன்னேற்ற
பாதையில் செல்வர். இது டெல்லியின் ஆம் ஆத்மி கட்சியாக இருந்தாலும் சரி தமிழகத்தின் பாட்டாளி மக்கள்
கட்சியாக இருந்தாலும் சரி, ”உனக்கு தலைவன் நீ என உணரும் வரையில் நீ அடிமை உன்
சமூகத்திற்கு”.
ஸ்டீபன். வி
No comments:
Post a Comment