I have an idea to create the world the way you want, so be part of this forum...

Thursday, 2 January 2014

ஊடக பாடமும் அதன் சார்ந்த ஊக்கப்டுத்தப்படாத கேள்விகளும்?

ஊடகம் என்றால் ஏன்னநாளேடுகளில் அல்லது ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் அதற்கு அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி என்ன?   தகவலை எப்படி செய்தியாக மாற்றுதல் மேலும் செய்தியின் உட்புற வெளிபுற சாரம்சங்கள் என்ன? செய்தி துறையில் அனுபவம் ஒன்றே போதுமா? மருத்துவம், தொழிற்நுட்பம் சார்ந்த படிப்புகளை போல் விருப்பம் சார்ந்த (professional) தொழிற்பண்புடைய  வேலை தானா இதழியல்மற்றவர்களை கவரும் வண்ணம்  பேசவும் எழுதவும் தெரிந்தால் போதுமா ? என்றெல்லாம் ஊடகத்துறையில் பணியாற்ற நினைக்கும் பலருக்கு வரும் சந்தேக கேள்விகள். நான் இந்த கட்டுரையில் கட்டமைக்கப்பட்ட ஊடக சூழலில் ஊடகம் படித்த மாணவனின் சில ஆய்வு சார்ந்த உண்மைகளை பகிரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

•   செய்திக்கும் தகவலுக்கும் இடையிலான வேறுபாட்டினை அமைப்பு சார்ந்த ஊடக நிறுவனங்கள் எப்படி வரவேற்கின்றன?

•     புரிதல் என்பது வெறும் வார்த்தை விளையாட்டா?

•     அடுக்கு மொழியும், ஆழ்ந்த சிந்தனையும் கூவி விற்க போதுமானவையா?

•     தமிழக ஊடகங்களின் நிறம் சார்ந்த செய்தி தொகுப்பின் நிலைப்பாடு என்ன?

•  ஊடகத்தில் பணியபுரிய அங்கு வேலை பார்ப்பவரின் உறவினராக இருந்தால் போதுமா?

•      ஊடகம் என்பது திறமை சார்ந்து வியக்க வைக்கும் வேடிக்கை கூத்தா?
.
ஒரு கட்டமைக்கப்பட்ட செய்தி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமானால் மேற்சொன்ன அனைத்தில் ஒன்றிலாவது தகுதி  பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் யாரும் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள் என்பது தமிழக ஊடக சூழலில் அனைவரும் அறிந்த உண்மை. இதழியலுக்கும் தொடர்பியலுக்கும் இடையிலான புரிதலை சமூக ஆய்வுக்கு உட்படுத்தாதவன்  தன்னைஊடகவியலாளர்அல்லதுபத்திரிக்கையாளர்என்று சொல்ல தகுதியற்றவன். ஒரு சிலர் தனக்கு அனுபவம் இருக்கிறது, தான் 10 வருடமாக பல கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறேன் எனக்கு நன்றாக செய்தியினை வடிவமைக்க தெரியும் என்று சொல்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை ,அதற்கு முதலில்  நிகழ்வுகளுக்கும் செய்திக்கும் இடையிலான தகவலை சமூக சார்ந்த பிரச்சனைகளில் தொடர்புபடுத்தி அதன் முக்கியத்துவத்தை விரைவில்  காரணப்படுத்தி கொள்ளும் வேகமும் விவேகமும் வேண்டும். இப்படி அவனால் தொடர்வுபடுத்தி செய்தியினை அறிந்து எழுத அல்லது பேசமுடியும் என்றால் அவர் தன்னை ஊடகவியலாளர் என்று சொல்லி கொள்வதில் தவறேதும் இல்லை என்பது ஊடகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஊடக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்றைய தமிழக ஊடக சூழல்நிறம் நிறைந்த பத்திரிக்கயாளர்களையும் ஊடகவியலாளர்களை அடையாளபடுத்தும் வண்ணத்து பூச்சிகளாக அலைந்து இருப்பதையும் இல்லாததையும் வார்த்தைகளால் வர்ணையூட்டும் மேடைபேச்சுகளாக பார்க்க முடியும். தகவல் பரிமாற்றம் எப்படி படிப்படியாக செய்தியின் ஆழத்தை தூர்வாருகிறது என்பதனை இங்கு இறுக்க கூடிய ஊடக வண்ணத்துபூச்சிகளின் செயல்பாடுகளை கொண்டு விவரித்திட முடியும்.

·         நிகழ்வு என்ன?

·         செய்தியாளரின் சேகரிக்கும் பணி,

·         நிகழ்வு குறித்து நேரடியாக பார்த்தோரிடமிடருந்து வினவுதல்,

·  தடயம் சார்ந்த தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்துதல் தவறாமல் அதனை உறுதி செய்தல்,

·       அதன் உண்மை நிகழ்வுகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் உறுதி படுத்துதல்,

·     செய்தி சேகரிக்கும் முன்பே நாம் செல்லக்கூடிய பகுதி மக்களின் நிலைப்பாடு,
·        முன்னதாக அந்த பகுதியில் நடந்த சம்பவங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல்,

· சேகரித்த தகவல்களை எப்படி அதன் முக்கியதுவம் கொண்டு செய்தியாக்குதல் என்பதெல்லாம் ஒரு செய்தியாளரின் அடிப்படை முக்கியம்.

   தமிழக ஊடக சூழலில் வடிவமைத்தல் என்பது காலம் காலமாக ஒரே மாதிரியாகத்தான் அமைய பெற்றிருக்கும் எடுத்துகாட்டாக ஒரு விபத்து நிகழ்வினை செய்தியாக பதிவு செய்ய முயலும் போது  விபத்து நடந்த பகுதி, நேரம், பலியானவர்கள் எண்ணிக்கையை தவிர அந்த செய்தியின் சாரம்சம் அதாவது விபத்து நடந்தவிதம் அனைத்து விபத்து நிகழ்வு செய்திக்கும் பொருந்தும் வண்ணம் எழுதுவார்கள். செய்தியாளர் தகவலை சேகரிக்க மட்டும் செல்லக்கூடாது மாறாக செய்தியினை மற்ற நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு பார்க்க கூடிய தைரியமும்துணிச்சலும், சமூக பொருப்பும் வேண்டும் என்பதனை எனது துறை சார்ந்த சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒரு போது தவறியதில்லை இது போன்ற ஊடக சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஏமாற்றம் என்னில் அதிகம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை அனுதினமும் எண்ணியபடி தூங்காமலிருந்த நாட்களையும் நான்  எண்ணிபார்க்கிறேன்.

அமைப்பு சார்ந்த ஊடக தளத்தில் எப்படி ஒருவரின் திறமையை மதிப்பிடுகிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே கேள்வி குறிதான், குறிப்பாக நாம் வியக்கும் சிலரும் தன்னை இது போன்ற அமைப்புகளுக்குள் வேறு வழியின்றி எளிதில் அடிமையாக்கி கொள்கிறார்கள் என்பது சிறு வருத்தம் அளிக்க கூடிய ஒரு நிகழ்வாகவே எண்ண வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் எத்தனையோ சமூகம் சார்ந்த நிகழ்வினை படிப்போரும், காண்போரும் எளிதில் புரிந்து கொள்வதற்கேற்ப பணியாற்றிய ஊடகவியலாளர்களின் எழுத்தும் குரலும் தமிழுக்கும் பெருமை சேர்ப்பவையாக இருந்திருக்கிறது அதற்கு எடுத்துக்காட்டாக சுப்பிரமணிய பாரதியார், ஜி.சுப்பிரமணிய ஜயர், டி.எஸ். சொக்கலிங்கம், எஸ்.பி ஆதித்தன், வி.கல்யான சுந்தர முதலியார் போன்றவர்கள் செய்தியின் பரிமானம் தெரிந்தவர்களாக இருந்ததன் விளைவு மக்கள் அவர்கள் எழுதியவற்றையும், பேசியவற்றையும் கேட்டு அதற்கேற்ப செய்தியினை மக்கள் தெளிவுற அறிந்து கொண்டார்கள். மேற் சொன்ன அனைவரும் தன் சுய லாபத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் கட்டமைக்கப்பட்ட ஊடக சூழலை உருவாக்க நினைத்ததில்லை. தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒளிபரப்பபடுவது தவறு என நான் குறிப்பிடவில்லை. முடிந்தால் விளம்பரங்களை ஒரளவு தனிக்கை செய்யலாம், ஆனால் செய்தி ஒளிபரப்பும் நேரத்தில் எப்படி செய்தியை நேர்த்தியான முறையில் உண்மை வெளிப்படும் வண்ணம் ஆய்வுக்கு உட்படுத்தி வெளியிட செய்வது என்பது பற்றி ஆராயவேண்டும் என்பதே எனது கருத்து.

சென்னையில் வெளிவரும் தினத்தந்தி நாளிதழை ஏன் அமெரிக்காவில் வசிக்கும் ஒர் அமெரிக்கர் இணையத்திலோ அல்லது கடைகளில் வாங்கியோ படிப்பதில்லை ஆனால் அமெரிக்க அரசியலை சரிவர தெரிந்து கொள்ளாத நாம் ஏன் அமெரிக்காவில் வெளியாகும் நுயார்க் டைம்ஸ், வாசிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபல ஆங்கில  நாழிதளை தேடிபடிக்கிறோம் என்பதனை சற்று ஆய்வு சார்ந்து அனைவரும் பார்க்க விரும்புகிறேன்?.


ஊடகம் ஏன் மத கருத்துகளை தனி இதழாகவும், தொடர் நிகழ்ச்சியாகவும் நான் வாங்கும் செய்தி இதழில் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி பெட்டியிலோ ஒளிபரப்புகிறது?.

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் 45 தொலைக்காட்சி அலை வரிசையில் மக்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்வுகள் குறைந்து விட்ட போதும் எப்படி அவைகள் அதிக பொருட் செலவில் நடத்தபடுகின்றன?.

ஊடகம், இதழ் என்ற பெயரில் நடத்தப்படும் சாதிய மற்றும் சமூக இதழ்கள் நமக்கு சொல்வதென்ன?.

ஊடகத்தின் முதலாளியாகவும் , பங்குதார்களாகவும் இருப்பவர்கள் எதைச்சார்ந்து இயங்குகிறார்கள், சமூக பொருப்பினை உணர்ந்தவர்களா அல்லது அவர்களின் பின்புல வருவாய் தலம் என்ன?

ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இவர்களுக்கு செய்யும் சேவைகள் என்ன?.

ஊடகத்துறையில் பணியாற்றுவோர் ஊடகத்தினை எப்படி தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்கிறார்கள்?.

ஊடகவியலாளர்கள் தங்களை எப்படி சமூகத்துடன் இனைத்து கொள்வதிலும், கட்சி சார்ந்த தனது சித்தாந்த கொள்கையினை வகுத்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் நாம் அவ்வப்போது நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்விகள்.

ஊடகம் என்ற சூழலில் பணியாற்றும் அனைவரும் நிகழ்வு, தகவல், தடயம்இவை அனைத்தையும் சமூக ஆய்வுக்கு உட்படுத்தும் போது செய்தியின் தன்மையையும் அதன் உண்மை நிலையையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பது ஆய்வு சார்ந்த எதார்த்தம்.

                                                                                                                ஸ்டீபன். வி

No comments:

Post a Comment