சென்னை கடற்கரை நடப்புச் சாலையில் சட்டமன்ற வைர விழாவினையொட்டி முதல்வரை
வாழ்த்தி பல்வேறு அமைப்பினரும் மற்றும் அ.தி.மு.க கட்சித் தொண்டர்களும் பத்தடிக்கு
ஓர் பானரை வைத்துள்ளனர். இந்த பானர்கள் பல்வேறு வகையில் தோரணங்களால்
வடிவமைக்கப்பட்டு நடை பாதைச் சாலையை மறிப்பது போல் அமைந்துள்ளன. இதனால் பொது
மக்கள் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு தோரணங்களையும் கடந்து செல்லும் போதும் சாலையில் நடந்து பின் நடை பாதையில்
செல்ல நேரிடுகின்றது. மேலும் முக்கிய சாலைகளில் ஒன்றான இச்சாலையில்
விபத்து நடபதிற்கான வாய்புகள் அதிகம் உள்ளத்தால் அரசு மற்றம் அரசை
சார்ந்த அதிகாரிகளும் இதனைக்கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள
வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஸ்டீபன்.வி
No comments:
Post a Comment