I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday, 29 September 2013

10 கோடி ரூபாய்க்கு விலை போன சினிமா நூற்றாண்டு விழா

காலம் நினைக்கும் காவியமாய் அனைத்துலக மக்களின் சந்தோஷ நேரமாய் அனைவரும் கொண்டாடிய இந்திய சினிமா இன்று 10 கோடி ரூபாய்க்கு விலை போகிவிட்டது.சாதனைகளையும் சமூக கருத்துகளையும் எழுத்திலும் நடிப்பிலும் செதுக்கிய பல கலைஞர்களின் திறமை சொந்தமாக்கிய நூற்றாண்டு தற்போது சிறு நூற்கண்டாக கூட மதிக்காமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது சினிமாவை சிகை அலங்காராமாக பார்க்கும் பலருக்கு சாதகம். கலைஞர்களை மட்டுமின்றி நல்ல படங்களை வாழ்க்கை பாடமாக தந்த இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோரின் உழைப்பு இன்று கொச்சைபடுத்தப்பட்டிருப்பது ஒரு பார்வையாளானாய் எனக்கு வேதனை .
சினிமா கலைஞர்களின் கொண்டாட்டத்தை கட்சி மாநாடாக மாற்றிய பெருமை புரட்சி செல்வி ஜெக்கு மட்டுமே போய் சேறும் ,என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. 

சிம்ரனும். திரிஷாவும் சாதித்தவை என்ன? பத்து வருடத்தை கூட கடந்திராத இவர்கள் நூற்றாண்டு சினிமாவில் கவுரவிக்க பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டு பூரிப்படைவதா அல்லது வியப்படைவதா?. இதிலும் பெரிய நகைச்சுவை என்னவென்றால் முதல்வரின் தலைமை உரையில் குறிப்பாக தனது ஆட்சியில் சினிமா ஆரோக்கியமான பாதையில் செல்கிறது என்றும் ஆபாச காட்சிகள் தனிக்கை செய்யப்பட்ட பின்பே திரைப்படங்களாக வெளியிடப்படுகின்றன என்று சொல்லி மட்டும் நிறுத்தாமல், கலைஞரை தாக்குவதற்காக தனது பணியாளர்களை கொண்டு தயாரித்த குட்டி கதைகளை ஏளனமாக நகையாடியது ஆதாயம் தேடும் அபத்தமான அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பதனை நிறுபித்துள்ளது. 

தொடக்க கால தமிழ் சினிமாக்களில் ஆபாச காட்சிகளை எம்.ஜி.ஆர்வுடன் சேர்ந்து நெருக்கமாக நடித்து அறிமுகப்படுத்தியதே செல்வி  ஜெ என்றால் மறுப்பாரில்லை. நான் செல்வியை ஜெயை எதிர்ப்பவன் அல்ல என்றாலும் இது போன்ற அடக்குமுறைகளை நடைமுறை படுத்தி செல்வி ஆதாயம் தேட நினைப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தன் சொத்தை விற்று திட்டங்களை அறிமுகப்படுத்துவது போல் அனைத்திற்கும் தன்னை அம்மா என்று அடையாள படுத்தி கொள்வதால் இவருக்கு கிடைக்க போகும் பலன் ஏராளம். ஏன் என்றால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இவரும் வரலாற்றில் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ராமசந்திரன் போல் நீங்கா இடம் பெற வேண்டும் என்ற நப்பாசைதான் என்பது ஊர் அறிந்த உண்மை. 

ரூபாய் 10க்கு அம்மா மினரல் வாட்டர், அம்மா உணவகம், அம்மா மலிவு விலை காய் கறி கடைகள் என அனைத்திலும் இவர் பெயர் தான் ஏன் இன்றைய நாளிதழ்களில் கூட செல்வியின் படம் வர தவறியதில்லை, இப்படி வரிசைபடுத்துகையில் நமக்கொரு கேள்வியும் எழுகிறது. இன்றைக்கு எத்தனை பேர் மெட்ரோ வாட்டரை குடிநீராக சென்னையில் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது கேள்வி குறிதான்?. மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் இந்த கூட்டு குடிநீர் சுத்தமான மினரல் வாட்டராக பயன்படுத்த இயலாமல் போனதற்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுகிறது? காய் கறிகள் ஏன் பொதுச்சந்தையில் விலையேற்றம் பெருகின்றன அதனை ஏன் அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் தமிழக அரசால் கொடுக்க இயலவில்லை என்பதற்கு செல்வியால் தகுந்த பதில் சொல்ல இயலுமா?.

90 வயதை கடந்தவர் கருணாநிதி என்றாலும் இன்றும் அவரின் சினிமா சாதனைக்கு இனையானவர்கள் யாரும் இலர் என்பதே உண்மை. இன்றும் தனது எழுத்தாலும், இடைவிடாத பேச்சாலும் செல்வியை பதில் கடிதம் எழுத வைக்கும் தலைவராக வலம் வரும் கருணாநிதி மற்றும் நடிகர் விஜயகாந்த், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பார்தீபன், எஸ்.பி, முத்துராமன், ஏ.ஆர்.ரகுமான், வைகை புயல் வடிவேல் போன்ற பலர் விலைபோன வியபாரிகளால் சினிமா நூற்றாண்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டிருப்பது சுதந்திர இந்தியாவில் ஆதிக்க சக்திகளின் ஆளுமை இன்னும் ஓயவில்லை என்பதுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சினிமா நூற்றாண்டு விழாவினை சுட்டிகாட்டலாம்.

தன்னை அடையாள படுத்துவதை அரசியல் செய்பவர்கள் முதலில் நிறுத்த வேண்டும் அதற்கான முயற்சிகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து முயற்சி செய்தால் மட்டுமே நல்லாட்சி சாத்தியம் 

                                                                                                                                                                       ஸ்டீபன் வி


No comments:

Post a Comment