I have an idea to create the world the way you want, so be part of this forum...

Saturday, 10 August 2013

சிந்தனையற்ற சினிமா நாகரிகம்

சினிமாவுக்கும் நடிகனுக்குமான உறவு வேற்றுமையானதால், சினிமா ஓர் சிந்தனையற்ற காட்சிபிளையாக மாறி போய்விட்டது நடிகர், நடிகைகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதையும், பால் அபிசேகமும், அவர்களுக்காக கோயில் கட்டுவேன் என எண்ண துடிக்கும் உணர்வும் இந்த சிறு வயதில்  நாம் எந்த காலத்தில் எப்படிபட்ட அடிமை தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்பாட்டை காண்பிக்கின்றன. ஆபாசமும் அந்தரங்க கருத்துக்களும் மட்டுமே  சினிமாவை இன்று புகழ்ச்சியின் உட்சத்தில் பணபோகமாக வாழவைத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

இந்தியாவை பொருத்தமட்டில் மாற்றங்கள் சுய சிந்தனையின் வளர்ச்சியால் வளர்த்து எடுக்கப்பட்டவை அல்ல, மாறாக அவை அனைத்தும் காலத்தின் போர்வைக்குள் திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. அதன் விளைவுதான் பெண் வெட்கம் இன்று சில்லரையாக சிதறி வருகிறது. தன் கணவன் மட்டும் தர்சிக்க வேண்டும் என்ற உணர்வு மங்கி கண்டவனையும் கண்சிமிட்டி கவர்ந்திலிக்கிறது..இப்படி ஏகப்பட்ட கூத்துகளை அடுக்கி கொண்டே போகலாம். கதைக்கலம் என்ற பெயரில் சமுக உறவை சீர்குழைத்து அதை வைத்து பிளைப்பு நடத்த வேண்டும் என்ற தேவையை இன்றை சினிமா சூழல் உறுவாக்கிவிட்டது.

நாட்டில், மாநிலத்தில் , மாவட்டத்தில், வட்டத்தில் ஏன் நம்மை சுற்றியுள்ள ஓவ்வோறு திசையிலும் எவ்வளவோ தீர்க்கப்பட வேண்டிய சமுக பிரச்சனைகள் இருக்கும் போது, ஏன் இந்த எல்லுக்கும் உதவாத சினிமா நம்மை ஆட்டிப்படைக்கின்றது? நடிகன் சக நடிகையை தொடும்போது ஏதோ தான் தொடுவதாக உணறும் இந்த கலச்சாரம் நாம் சார்ந்த சூழலில் எப்படி ஒட்டிகொண்டது போன்ற கேள்விகள் மனதிற்கு பெரும் குளப்பத்தை ஏற்படுத்துகின்றன.

எப்படிப்பட்ட சினிமாவாக இருந்தாலும் அது ஒர் மனிதனின் தாக்கத்திலோ அல்லது அவன் சார்ந்த எண்ணங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன. குறிப்பாக இயக்குனர்களின் படைப்புகளை வெளி நின்று பார்த்து ரசிப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அவர்களின் படைப்பில் உருவான கதாநாயகனை வேற்று உலக வாசிகளின் தெய்வங்களாக பாவித்து தன் நிலையை மறப்பதின் விளைவு, சினிமா என்ற வளையம் சராசரி மனிதனின் வாழ்வியல் எண்ணங்களை சுறுக்கிவிடுகின்றன, அவன் லட்சியம் திசை மாற்றப்படுகின்றன , அவனது தேடல் முடுக்கிவிடப்படுகிறது. எந்தவோறு நல்ல சினிமாவாக இருந்தாலும் சரி அது குறிப்பிட்ட வளையத்திற்குள் மட்டுமே பயணிக்கிறது, அதன் பரப்பளவு உட்பிரிவுகள் , வியாபார நோக்கம் கொண்டே இன்றைய சினிமா படமாக்கப்படுகிறது.

ஊடகத்தின் வாயிலாக ஒர் நடிகையின் அறை குறை ஆடை அணிந்த புகைப்படம் வருகிறது என்றால், முதல் முறை வெறும் விளம்பரமாகவே தெரியும் அதுவே அடுத்த முறை அது சார்ந்த விளம்பரம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்டுகிறது என்கிற போது நமது கவணமும் அதை நோக்கி பயணிக்கும், இப்படிபட்ட அடிமைதணத்தை இன்றைய ஊடகங்களும் சரி சினிமா துறையும் சரி மூலதன உத்திகளை கொண்டே செயல்படுகின்றன என்பது வேதனயே.


No comments:

Post a Comment