I have an idea to create the world the way you want, so be part of this forum...

Tuesday, 23 July 2013

தூக்கி எறியப்பட்ட காகம்

காலை 6 மணி, கா, கா வென காகத்தின் கரையொழி, திறந்த ஜன்னலை சட்டென்று கோபத்துடன் மூடினேன். தெழியாத விழிகளோடு விட்டத்தை பார்த்து கொண்டிருந்த நானோ, நேரத்தை கவனிக்காமல் விட மணி 9ஆனது. அலுவலகத்தில் 10 மணிக்கு இருக்க வேண்டும், விறு விறு வென எல்லாம் முடிந்தேரியது. அலுவலகம் சென்றது முதல் இடைவிடாத வேலை பழு, செய்த பல தவறுகளில் கிடைத்த சில அனுபவங்களோடு, ஏதோ இன்றைக்கு செய்த தவறுகளை திருத்தி கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என வீடு திரும்பினேன். அறை கதவை திறந்தவுடன் தொலைப்பேசியில் நண்பன், என்னவென்று வினாவினேன், “முதல் மாதம் சம்பளம் வாங்கிவிட்டேன் வா மதுகுப்பிகளோடு உணக்காக காத்திருக்கிறேன் என்று”, இலவசமாக எதை தந்தாளும் கூச்சம் இல்லாமல் வாங்கி கொள்ளும் மனது – சொல்லிவிட்டேன் அடுத்த நொடியே வருகிறேன் என்று அடுத்த 20 நிமிடங்களில் அவசர அவசரமாக நண்பன் வீட்டை அடைந்தேன். கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது நான் எதோ பரம்பரை குடிகாரன் போல் அவன் பாவித்த விதம் ஒரு கனம் மனதை உழுக்கியது.

மது குப்பிகளில் குளு குளுவென சப்தம், குப்பிகளில் உள்ள மதுவை பகிர்ந்தளித்து சந்தோஷத்தை கொண்டாடிய சில நிமிடங்களிலேயே போதை காதல் ஆனது.


காலம் நகர நகர காதலும் போதையுமாக மனம் கனமானது, இரவின் இன்பத்தை காதல் தொட பேசிய சில ஞாபகங்களோடு, இரவும் பகலானது போலும். கொசுக்களும் ஈயும் தன் வச பசியை மது குப்பிகளின் மேல் அமர்ந்தும் தன் தலையின், காதின் ஓரமும் காதல் பாடி கொண்டிருந்தது. எழுந்து நடந்திட மனமில்லாமல் அவல் முக கண்ணங்களை பார்த்தவாறு ஜன்னலை நோக்கி திரும்பினேன் கருப்பு நிற காகம் என்னை நோக்கி கரந்ததை உணர்ந்தேன்.. மூன்று முறை நான் விரட்டியும் என்னை நோக்கி கரைந்த காகத்தின் கரையொழியை அவள் பாடியதாக என்னி ரசித்து  மூடினேன் கண்களை அவள் ஒலி கேட்க…


No comments:

Post a Comment