தவிப்பும்
தயக்கமும் ஒரு நொடி அல்ல பல நொடிகளின் மதிப்பை உடம்பின் அத்தனை நரம்புகளுக்கும்
நினைவுபடுத்தும் தருணம்.
விழிப்புடன்
நாம் என்ன செய்கிறோம் என்பதை புரிந்து வாழ்ந்தாலே போதும் பல மாறுதல்களை மடித்து
விழுங்கி விடலாம்.
ஏன்
எனக்கு இது நடக்கிறது என்றொரு கோபம் கலந்த பய உணர்வுடனான கேள்வி என்றும் நமக்கு
பலனை தராது.
"உழைப்புக்கேற்ற
ஊதியம் உன்னை உயர்த்தும்" என்பது நாம் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று.
எதுவும்
நாம் இல்லாமல் திட்டமிடப்படுவதில்லை , நம்மால் திட்டமிடப்படுகின்றன, நமது
செயல்களின் காரணம் நமக்கு புரிந்தாலே போதும் நாம் சரியான வாழ்கையில் தான்
பயணிக்கின்றோமா என்பது புரிந்துவிடும்.
ஏக்கங்கள்
என்றும் நம் புதிய லட்சியத்திற்கு உதவபோவதில்லை , நம்மை ஒரு படி
காயப்படுத்தப்போகிறது.
இயலாமையும்
இல்லாமையும் நம் மனதில் உதிக்கும் இரு உயிர் கொள்ளிகள் நம்மை நடை பிணமாக மாற்றும்
வல்லமை கொண்டவை தகுந்த உழைப்புடன் கையாளுதல் அவசியம்.
நேற்று
இரவு நேர பணியில் இருக்கும்போது பல கருத்துகள் புதிதாக என் மனதில் உதித்தன அதில்
சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
உங்கள்
நட்புடன்
ஸ்டீபன். வி
No comments:
Post a Comment