I have an idea to create the world the way you want, so be part of this forum...

Monday, 29 April 2013

கலங்க வைக்கும் தமிழக அரசு

முக்கிய சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலையில் முதல்வரின் வருகை மற்றும் ஏனைய  அரசு சார்ந்த அதிகாரிகளின் வருகைக்காக பத்து மிட்டர் இடைவெளியில் மகளிர் போக்குவரத்து காவல் துறையினரும் மற்றும் இதர பெண் காவலர்களும் இணைந்து  காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை, இச்சாலையில் நின்று பாதுகாப்பு பணியை செய்து வருகின்றனர்.

இவர்களின் அவல நிலை

காலை உணவை வேகமாக உண்டு, விரைந்து பணிக்கு வரும் இந்த பெண்கள் அநேகர் 21 வயதுக்கும் குறைந்தே இருகின்றனர். மணி 10 யை தாண்டிய பின் இடதும், வலதுமாக தங்கள் கால்களை மாற்றி மாற்றி வைத்த வண்ணம் மாலை 6 மணியை அவர்கள் கடக்க படும்பாடு வேதனையே. தகுந்த உடல் தகுதி இல்லாத சிறு பெண்களை காவளராக நியமிப்பதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதும், ஆண் காவலரோ அல்லது உயர் அதிகாரியோ அவ்வழியில் செல்லும்போது, தன் வருத்தத்தை மறைத்து முன் நின்று வணக்கம் வைப்பது போன்ற நிகழ்சிகள் தினமும் அரங்கேரி கொண்டு இருக்கின்றன. நாம் பள்ளியில் படிக்கும் போது காலை நேர நிகழ்சிகளில் வெயிலின் தாக்கம் தாங்காது நம் வகுப்பு தோழிகள் மயக்கம் வந்து விழுவார்கள், அதைப்போல் தான் இன்று ஒரு பெண் காவலர் விழுந்து விட்டார். நான் விடுதில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தேன், செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் தாங்காது மயக்கம் வந்து விழுந்த காவலரை தூக்கி சென்றனர்.

அரசின் மெத்தனம் 

பெண்களுக்கு சம உரிமை காவல் துறையில் என்ற கருத்தை முன் நிறுத்தி பல திட்டங்களை  அரசு செய்து வருகிறது, ஆனால் அந்த திட்டங்கள் தகுந்த தகுதியுடன் நடை முறைப்படுத்த படுகின்றனவா என்பது கேள்வி குறியே!.

அந்த பெண் காவலர்கள் கோடை வெயிலில் நிற்கிறார்கள் என்பதும், அவர்களுக்கான குடி நீர் வசதி மற்றும் கழிப்பிட வசதியை பற்றி யோசித்து பாருங்கள்..நடமாடும் வண்டிகளில் தான் அவர்கள் அவசரம் என்றால் செல்ல நேரிடுகிறது. ஒரு சில பெண்களை பார்க்கும் போது கிராமத்தில் இருந்து வறுமையின் உச்சியில் சிக்கியவர்களாக தெரிகின்றனர், மற்றும் ஒரு சிலர் நம் உடன் பிறந்தோர் சாயலுடன் அப்படியே..   

குறைந்த சம்பளத்தில் தன் உடம்பையே பணயம் வைத்து நின்று கொண்டிருக்கும் இவர்கள், அங்கே நிற்பதினாலும் எந்த பலனும் இல்லை..முதல்வர் வரும் போதும் மட்டுமே பரப்பரப்பாக தங்கள் வேலைகளை செய்கிறார்கள். குறிப்பாக ஒரு வாரத்தில் எப்படியாவது ஒரு உயிர் சேதம் ஏற்ப்பட்டுவிடும் இந்த சாலையில் , சாலையின் குறுக்கே நடந்து செல்பவர்களை அதட்டி மாற்று வழியில் செல்ல கூறும் அளவுக்கு இவர்கள் தைரியமானவர்களாக இல்லை என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை.
ஒவ்வொரு நாளும் மரண மேடை என்றாகி விட்ட இந்த காலத்தில் அரசியல் கட்சியினர் இரண்டு நாளைக்கு ஒரு முறை பாதாகைகளை கட்டி அந்த வழியில் செல்பவர்களை அலைகழிக்க செய்யும் அந்த நாடகமும் அரங்கேறி கொண்டிருகிறது ..

வளர்ச்சியற்ற ஊடகம்

பல்வேறு பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்க்கு ஊடகமே சிறந்த வழி என்பதெல்லாம் முற்றிலும் முரண்ப்பட்ட கருத்து என்று தோணும் அளவுக்கு . ..வளர்ச்சி குன்றிவிடுமோ என்ற அட்சத்தில் சமுகம் மற்றும் சமுக சார்ந்த சூழலில் நடக்கும் பல பிரச்சனைகளை தவறென்று தெரிந்தும் வேடிக்கை மட்டும் பார்க்க கூடிய சூழல் இந்திய ஊடகங்களில் அதிகம் காணப்படுகின்றன , அதன் விளைவுதான் இது போன்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு சார்ந்த பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல்  இருக்கின்றன என்பது ஒரு ஊடக மாணவனாக நான் கண்ட உண்மை. இதை உணர்ந்து வளரும் என்னைப் போன்ற மாணவர்கள் சமுகம் என்றால் யார்? என்பதை முதலில் கற்றுக்கொள்ள அறிவு மிகுந்தவர்கள், ஏனைய பெரியோர்கள் அதற்கு தேவையான அறிவை அவர்களின் அனுபவம் கொண்டு விளக்கினாள் அதற்கான தீர்வை எட்ட முடியும் என்பது உறுதி. 
ஸ்டீபன்.வி

No comments:

Post a Comment