வறுமையின்
வலியை அறிந்த சிலர் சமபந்தி உணவு முறை என்ற பழக்கத்தை உணவு விடுதிகளில் பழக்கப்படுத்தினர்.
இவ்விதியின்படி ரூபாய் 20க்கு ஏழைகளும் தரமான உணவை குறைந்த பணத்தில் வாங்கி
சாப்பிடலாம், ஆனால் எத்தனை உணவு விடுதிகள் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்
என்பது கேள்விகுறியே?
சென்னையில் சில நாட்களாக உணவு, உடை மற்றும் பயணச்செலவுகளின் விலை நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே போகின்ற நிலையில், எப்படி ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள்,
கைவிடப்பட்டோர் மற்றும் பிழைப்பின்றி அலையும் முதியோர்கள் தங்களுக்கான தண்ணிறைவை
அடைய முடியும் என்பது நமது தலைவர்களால் பதிலளிக்க முடியாத வேதனையே.
திரையரங்குகளிலும்
இது போன்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது, குறிப்பாக சென்னையை பொருத்த வரை
ஓரளவிற்கு அனேக திரையரங்குளில் நடை முறையில் உள்ளது.
No comments:
Post a Comment