கைவிசம்மா கைவிசு கடைக்கு போலாம் கை வீசில் தொடங்கி கல்வியை கடையில்தான் வாங்க
முடியும் என்பது போல் நாம் கற்கும் கல்வியின் நிறம் ஒவ்வொரு நாளும் முதாலாளித்துவ
கோட்பாடுகளையும், வியாபாரத் தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, அதன்
விளைவுதான் நாம் என்ன கற்கிறோம் என்பதை அறியாது, பொய்கால் குதிரைபோல் வளம்
வருகிறோம். பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்தப்படும் ( NET)
தேசிய ஆசிரியர் தகுதி சுற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் 15% தேர்ச்சிப் பெற்ற
மாணவர்களை கல்லூரியில் பயிற்று விப்பதற்கு தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்படும்
என்று அக்குழு சமிபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது, இதற்கு கண்டனம் தெரிவிக்கும்
வகையில் மாணவர்கள் மற்றும் தகுதி தேர்வின்னை எழுதிய பலர் நீதி மன்றங்களில் வழக்கு
தொடுத்தனர்.
அக்குழுவில் மாணவர் ஒருவர் கூறும்போது தேர்வில் முதலிடத்தை
பெறக்குடிய அநேக தேர்வாளர்கள் கல்வியை சரியாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வழியில்
கற்றுத்தர இயலாதவர்களாகவும் மற்றும் பலர் தன் வாழ்கையில் தான் நினைத்ததை அடைய
கிடைத்த ஒரு வேலைவாய்ப்பாகவே இத் தகுதி தேர்வினை கருதுகின்றனர், ஆனால் ஒரு சிலர்
மட்டுமே ஆசிரிய பணியினை விரும்பி தேர்ந் தெடுப்பவர்களாக இருகின்றனர். ஆனால்
மறுபுறம் ஆசிரியர் பணியில் விருப்பம் இருந்தும் அரசு "சாதி, மதம் மற்றும்
மொழி வாரியாக பிரித்து பின் மதிப்பெண்கள் வாரியாகவும் பரிசீலனை செய்வதால்,
இத்தேர்வில் இத்தனை பிரச்சனைகளை தாண்டி வெற்றிபெறுவது ஓர் எட்டா
கனியாகயாகத்தான் இருக்கிறது என வெம்பினார்.
s
No comments:
Post a Comment