கடல் அலையில் தத்தளிக்கும் படகைப்போல் தமிழ் நாட்டு மக்கள் விலை
உயர்வால் தங்களின் இயல்பு வாழ்கையை இழந்த நிலையில் முதல்வரின்
அறிவிப்புகளால் அதிர்ச்சி அடைந்து செல்லும் இடம் அறியாது தவிக்கும் நிலை ,
பல தலைவர்கள் பண்பாடு சிறக்க, தமிழுணர்வு ஊட்டி வளர்க்கப்பட தமிழகத்தின் நிலை
இன்று முற்றிலும் மாறி, தான் நினைத்தபடி "இது அப்படித்தான்",அது
இப்படிதான் என்று ஆணுக்கு இல்லாத ஆணவம் ஏன் இந்த பெண்ணுக்கு என்று கூறும்
அளவுக்கு மக்களின் மன நிலை மாற்றப்பட்டிருகிறது. மூன்று ரூபாய்
டிக்கெட்டுக்காக கால்கடுக்க நின்று அந்த பேருந்தை கண்டு ஏறி பின்
கூடையை தன் தலையில் சுமந்து வயிற்று பிழைப்புக்ககாக வியாபாரம்
செய்யும் மக்களை எனது தமிழகம் மறந்துவிட்டது, தன் குழந்தை பால் அருந்துவதற்காக
தினசரி வேலைபார்த்து சேகரிக்கும் பணத்தில் குழந்தையின் பசியை தீர்க்க போராடும்
தாயின் அன்பை மறந்து விட்டது என் தமிழகம்.
ஸ்டீபன்.வி
No comments:
Post a Comment