I have an idea to create the world the way you want, so be part of this forum...

Saturday, 20 October 2012

விலை வைத்து விற்கப்படும் ஊடகங்கள்


             உரிமையை உரத்த குரலாலும் வலிமையுற்ற எழுத்தாலும் எடுத்துரைக்க வேண்டிய ஊடகங்கள் தமது கடமையை மறந்து அரசியல்வாதிகளாலும் தொழிலதிபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட செயலிழந்த பொம்மை போல்  காணப்படுகின்றன. மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை இழந்து தத்தளிக்கும் போது, அந்த இழப்பின் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அதனை விமர்சித்து பாட்டிற்கு இசையமைப்பது போல் விளக்கம் தந்து , அவர்களின் வலியை மழுப்பும் மற்றும் விற்கும் இடைத்தரகர்களாக இன்றைய ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றன. ஊடகத்தை நடத்த பணவரவு தேவை தான். ஆனால் அந்த பணத்தை பெறுவதற்கு பல வழிகள் இருந்தும் ஏன் மக்களின் வலியினையும், கஸ்டத்தையும் விற்பனையாக்குகிறார்கள் என்பதை நினைக்கும் போது கேவலமாக இருக்கின்றது. குறிப்பாக இன்றைய தொலைக்காட்சி நிறுவனங்களின் "Realityshow" என்ற பெயரில் பல வண்ணம் பெயர்கள் சூட்டி தங்கள் சுய வியாபாரத்திற்காக போட்டி மனப்பான்மையை விதைப்பதும் பலரின் கஸ்டத்தை இவர்கள் தீர்த்து வைப்பது போல், அந்த தம்பதியர்களை உலகிற்கு காட்டி படமாக்குவது, கூடங்குளம் பிரச்சினையில் முன் ஆதரித்தும், பின் இரட்டை நாடகம் போடும் ஒரு கருவியாகவும் அரசிற்கு பயந்து அரசியல்வாதிகளுக்காகவே செய்தி ஊடகத்தை நடத்துவது போன்ற கருத்துக்கள் நெஞ்சைநெகிழவைக்கின்றன.

ஊடகம் என்பது ஓர் மாபெரும் சக்தி. அது என்றைக்கு ஏழைகளின் குரலாக ஒலிமாற்றப்படும் என்பது ஓர் அரிய புதிர். ஆங்கில செய்தி நிறுவனங்களில் ஆணவ சப்தம் தனித்தன்மை மற்றும் வியாபார தளம் உண்மையை மறைப்பதாகவே இன்றும் இருக்கின்றன.

"சற்று யோசித்துப் பாருங்கள்.
உண்மையை உங்கள் கண்ணிலே நீங்கள் இலவசமாகக் காணலாம்".

                                                                                                                                                              ஸ்டீபன். வி

No comments:

Post a Comment