I have an idea to create the world the way you want, so be part of this forum...

Wednesday 14 March 2012

ஊடகங்களின் மாறுபட்ட பார்வை.


               ஊடகங்கள் அனைத்தும் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காகவும், மக்களின் எண்ணத்தை எடுத்துரைபதற்கும் ஒரு சிறந்த பயன்பாடாய் செயல்பட வேண்டியவை. ஆனால் இன்றைய நாளேடுகள் முறை மீறி அவ்வாறு செயல்படுவதில்லை, காரணம் ஊடகம் இன்று செய்தியின் முக்கியதிவத்தை பிரித்து பார்க தெரியாதநிலை. நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரின் புகைப்படமும், எடுத்துக்காட்டாக குடியரசுத்தலைவர் ஆளுநர்கள், புதியதாக கட்சி ஒன்றை ஆரம்பிக்க நினைப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசியல்  பொறுப்பாளர்கள் அனைவரின் அச்சுபடமும் இளைய தலைமுறைகளை கவரும் வண்ணம் குறிப்பாக அவர்களை ஊக்குவிப்பது போல தினசரி நாளேடுகளில் நாம் காண இயலும். இதை நாம் அறியாமை என்ற கூற்றால் அடக்கிவிட முடியாது, ஏன் என்றால் ஒவ்வொரு செய்தித்தாளும் மறைமுகமாக ஏதோ ஒரு அரசியல் அமைப்பின் மேம்பாட்டுகாகதான் செயல்பட்டு வருகிறது என்பது தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு ஊர் அறிந்த உண்மை. தேசிய ஆங்கில நாளிதழ்கள்  நடைமுறையை மீறி புதிய வார்த்தைகளால் ஒரு சாதாரண கைதட்டலை கூட கடிகாரமுள் மாறி சுற்றுவதாக கூறும் காலமாகிவிட்டது. ஆங்கில நாளிதழ்  என்றைக்கும் புதிய தொழில்நுட்பத்திட்கு ஒரு தடைக்கல்லாக இருந்தது கிடையாது, ஒருவகையில் புதிய தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமயாகினாலும் அந்த தொழில்நுட்பத்தினால் விளையும் சீரழிவு அதிகம். ஆனால் குறிப்பிட்  பண்பாடுகளை  கொண்ட மக்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறு திட்டங்கள் இருக்கிறதா என்பதை அவர்கள் சிறிதும்கூட ஆராய்வதில்லை. ஆனாலும் மறுநாட்காலையில் வண்ண புகைப்படங்களுடன் நமது அரசியல் தலைவர்கள் ஒருவரை  ஒருவர் கைகுலுக்கி கொள்வதை வேதனை புகையாக சுவாசிக்கிறேன் அறியாமை என்ற இருட்டில்.

"ஊடகங்கள் நினைத்தால் எதுவும் செய்யலாம்" என்ற ஊடக ஆராட்சியாளர்  மேக்லூகனின் கூற்றுக்கு அமைய இன்றைய ஊடகங்கள் குறிப்பாக நம்பகத்தன்மை என்ற பெயரில் பல பொய் செய்திகளைக்கூட உண்மை என கூறி அதை மக்களின் மனதில் நிலைநாட்ட கூடிய அளவுக்கு வலிமைபெற்று இருக்கிறது. தமிழக நாளிதழ்களில் தரம் நாளுக்குநாள் குறைந்துவருகிறது. காரணம் ஒவ்வொரு செய்தியும் மாநில அரசின் அறிவிப்பை தெரிவிப்பதற்காக  கூட்டங்களை கூடுவதற்காகவும் மற்றும் அரசியல் நடத்துபவகளின் கட்டுரை களமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் பத்து நாளிதழ்களில் தரம் குறைந்தாலும் போட்டியும், வேகமும் ஒன்றை ஒன்று வேறுபடுத்தி கட்சிகளின் கோட்பாட்டை பரப்புவதில் ஒரு சிறந்த ஊடக  சாதனை செய்துள்ளது என்றால் மிகை ஆகாது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் தமிழ் வார, மாத இதழ்கள் ஆளுக்கொரு கைதொலைபேசி வைத்துகொல்வதுபோல் ஜாதியின்  நோக்கிலும் சினிமாத்துறைதான் செய்தி என கூறும்வகையிலும் பக்கத்திற்கு பக்கம், அட்டைக்கு அட்டை குறிப்பாக நடிகர் நடிகைகளின் அரைகுறை படங்களை வியாபார  நோக்கில் வெளியிட்டு விலைபார்க்கும் வினியோகிஸ்தர்கள்  மற்றும் பத்திரிக்கை உரிமையாளர்கள். இத்தகைய பெரிய விஷயங்களை தெரிந்தும் வாங்கிப்படிக்க துடிக்கும் நம் கண்களின் ஏக்கம்தான் என்ன..? இவை அனைத்தும் நாம் சிந்தித்து சீரமைக்க வேண்டிய காரணிகள். ஒவ்வொருநாளும் ஓயாத ஒரு பிரச்சனை நம் தமிழ்நாட்டில், ஆனால் உண்மை இன்னும் முழுமையாக ஊடகத்தினால் உருதியுற கூற  இயலாத நிலை.

மாறுமா நம் நாளேடுகள், நாட்டினை வழிநடத்த
நின்று யோசிப்போம்  ஒருமுறையல்ல பலமுறை.

- வி . ஸ்டீபன் -

1 comment: